உலகத்திலே விலை உயர்ந்த மாம்பழம்!

மத்திய பிரதேசத்தில் உலகின் அதிக விலை உயர்ந்த மாம்பழம் (Miyazaki Mango) கிடைக்கிறது. ஒரு கிலோ 2.70லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. தோட்டத்தில் உள்ள 7 மாம்பலங்களை பாதுகாக்க 4 நாய்கள், 6 பாதுகாவலர்களை அதன் உரிமையாளர் நியமனம் செய்துள்ளார். கடந்த ஆண்டு இந்த மாம்பலத்தை திருடர்கள் திருடி சென்றதால இந்த முறை பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபால்பூரைச் சேர்ந்தவர் சங்கல்ப் பரிஹார். இவரது மனைவி ராணி. இவர்கள் தங்களுடைய தோட்டத்தில் மாம்பழ கன்றுகளை நட்டு வைத்து வளர்த்து வந்துள்ளார்கள். அவை தற்போது பழத்தோட்டங்களாக அவை மாறி உள்ளன. அதில் ஒரு மாமரக்கன்று ஜப்பானின் மியாசாகி மாம்பழங்களுக்கு சொந்தமானது என்பது அவர்களுக்கு தெரியாது.

உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழங்களில் ஒன்றாக அறியப்படும், ஜப்பானின் மியாசாகி மாம்பழங்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன, அவை தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை விட அதிக அதிக விலைக்கு விற்பனையாகிறது. இந்த மியாசாகி மாம்பழத்தின் விலை கிலோ 2.7 லட்சம் ரூபாய் வரை கடந்த ஆண்டு விற்பனையானது. அந்த மாம்பலம் தனது தோட்த்தில் இருப்பதை இந்த ஆண்டு தான் அறிந்திருக்கிறார்.

6 நாய்கள்

இதனால் தங்களது 7 மாம்பழங்களை திருடர்களிடமிருந்து காப்பாற்ற இவர்கள் 4 பாது காவலர்களையும் 6 நாய்களையும் தங்கள் பழத்தோட்டத்தை பாதுகாக்க 24 மணி நேரமும் பாதுகாப்புக்கு வைத்துள்ளார். கடந்த ஆண்டு திருடர்கள் இந்த பழங்களை திருடி சென்றதால் இந்த முறை பாதுகாப்பு ஆட்களை நிறுத்தி உள்ளதாக கூறுகிறார் சங்கல்ப் பரிஹார்.

இந்த முறை பாதுகாப்பு

இதுபற்றி சங்கல்ப் பரிஹார் கூறும் போது. “கடந்த வருடம் எங்கள் தோட்டத்தில் திருடர்கள் புகுந்து விலை உயர்ந்த ஜப்பான் வகை மியாசாகி மாம்பழத்தை திருடிவிட்டார்கள்,. இந்தியாவில் இந்த மாம்பழம் அரிதினும் அரிதாக காய்க்கும். இதன் விலையும் சர்வதேச சந்தையில் அதிகம். அதனால் இந்த முறை மியாசாகி பழங்களை காக்கவே காவலுக்கு ஆட்களையும், நாய்களையும் தோட்டத்தில் வைத்துள்ளேன் என்றார்.

சென்னையில்

இந்த கன்றுகள் எப்படி கிடைத்தது என்ற கேள்விக்கு. சென்னையில் ரயிலில் ஒரு மனிதரை சந்தித்தேன், எனக்கு இரண்டு அரிய ஜப்பானிய மா மரக்கன்றுகளை வழங்கினார். ஆரம்பத்தில், எனக்கு இந்த மாம்பழ வகை குறித்து தெரியாது. மரக்கன்றுகளை கொடுத்தவரின் தயாராரான தமினியின் பெயரால் இந்த மாம்பழங்களை அழைத்து வருகிறேன்.

விதை முக்கியம்

இந்த் மாமபழ வகை குறித்து அறிந்த் சில திருடங்கள் கடந்த ஆண்டு திருடி சென்றுவிட்டார்கள், இந்த ஆண்டு, பாதுகாப்புக்கு ஆட்களை நியமித்துள்ளோம். எங்களுக்கு மாம்பழங்களை விற்கும் திட்டம் இல்லை. விதைகளை பயன்படுத்தி அதிக மரங்களை வளர்க்க போகிறோம்” என்றார்

மியாசாகி மாம்பழங்கள்

ஜப்பானின் மியாசாகி மாம்பழங்கள் ‘சூரியனின் முட்டை’ என்று அழைக்கப்படுகிறது ஒவ்வொரு மாம்பழமும் தலா 21,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மாணிக்கங்களைப் போல சிவப்பு நிறத்தில் பளபளக்கும் அவை உலகிலேயே மிகவும் விலை உயர்ந்தவை. மிகவும் அதீத சுவை கொண்டவை. சர்வதேச சந்தையில் ஒரு கிலோவுக்கு ரூ .2.70 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.

நன்றி: Oneindia


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *