ஸ்ரீவில்லிபுத்தூர் பூவாணி அரசு தோட்டகலைப்பண்ணையில் ஒரே மாமரத்தில் ஏழு வகையான பழங்களைத்தரும் ஒட்டுரக கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.அப்பண்ணை அலுவலர் சுந்தர்ராஜன் கூறியதாவது:
- இப் பண்ணையில் பஞ்சவர்ண மா கன்று கடந்தாண்டு நடப்பட்டது. அதன் கிளைகளில் ஹிமாயுன், பங்கனப்பள்ளி, பஞ்சவர்ணம், நீலம், மல்லிகை, காதிர், அப்போன்ஸா ஆகிய ஏழு மா மரக்கன்றுகள் ஒட்டு சேர்க்கப்பட்டுள்ளன.
- மா மரக்கன்றுகள் நட்ட முதலாண்டில் பூக்கத்துவங்கி இரண்டாம் ஆண்டில் காய்க்கத்துவங்கும்
- இம்மரம் 2016 முதல் காய்க்கத் துவங்கும். மார்ச்சில் துவங்கி ஆகஸ்ட் இறுதிவரை ரகவாரியாக பழங்கள் கிடைக்கும்.கன்னியாகுமரியில் இதுபோன்ற மாமரம் உள்ளது.
- இதுபோல ரகங்களையும் ஒரே மா மரத்தில் ஒட்டு சேர்த்து விதவிதமாக பழங்களை பெறமுடியும்
- .இரு ரகங்களை ஒட்டு சேர்த்த மா கன்று ரூ.75 ரூபாய். கூடுதலாக சேர்க்கப்படும் ஒவ்வொரு ரக ஒட்டு சேர்க்கைக்கும் ரூ.50 முதல் ரூ.100 வரை வசூலிக்கப்படும். தேவைப்படுவோர் 09750549687 ல் தொடர்பு கொள்ளலாம்
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்