மாமரங்கள் சாகுபடியில், ஈடுபட விரும்பும் விவசாயிகள், மண்ணின் கார, அமிலத்தன்மையை பரிசோதிப்பது அவசியம் என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.தோட்டக்கலைத்துறை அறிக்கை:
- உடுமலை பகுதியில், ‘மா’ சாகுபடியில், ஈடுபட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
- இவ்வாறு, ஆர்வம் காட்டும் விவசாயிகள், தங்கள் மண்ணின் கார, அமிலத்தன்மையை பரிசோதிப்பது அவசியமாகும்.
- கார, அமிலத்தன்மை 5.5 முதல் 7 வரையுள்ள மண்ணில் மட்டுமே மாமரங்கள் வளரும்.
- களிமண், மிக மணற்பாங்கு, சிறு பாறைகள் கொண்ட சுண்ணாம்பு காடு, உவர் நிலங்கள் மற்றும் வடிகால் வசதியற்ற நிலங்களில், மாமரங்கள் வளராது.
- வெப்ப மண்டல பயிரான மாமரங்களை ஒரளவு மித வெப்பமான, கடல் மட்டத்திலிருந்து 1,400 மீ., உயரம் வரையுள்ள பகுதிகளில் மேற்கொள்ளலாம்.
- 5 முதல் 44 செல்சியஸ் வெப்ப நிலையில் வளரும் மரங்கள், 21 முதல் 24 செல்சியஸ் வரை வெப்ப நிலை நிலவினால், நல்ல விளைச்சல் அளிக்கும். ஆண்டு சராசரி மழையளவு 256 மி.மீ., முதல் 2,500 மி.மீ., வரை இருக்கும் பகுதிகளில், இந்த சாகுபடி மேற்கொள்ளலாம்.
- சாகுபடியில், 5 வயதிற்குட்பட்ட மரங்களுக்கு, வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சலாம்.
- பூக்கள் மலர்ந்து, பிஞ்சுகள் உருவாகி, வளரும் பருவத்தில், வாரம் ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
- சொட்டுநீர் முறையில், சிறு நாற்றுகளுக்கு, 50 லிட்டர் வரையும், காய்ப்பில் உள்ள மரத்திற்கு, 90 முதல் 150 லிட்டர் வரை தண்ணீர் பாய்ச்சலாம்.
- சொட்டுநீர் பாசனத்தால், 23 சதவீத மகசூலை அதிகரிக்கலாம்; தண்ணீர் தேவையும் 40 சதவீதம் குறைகிறது.
- இயற்கை வேளாண் முறையில், இனிப்பான பழங்களை உற்பத்தி செய்யலாம்.இவ்வாறு அறிக்கையில், கூறப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்