மானிய விலையில் ஒட்டு ரக மா கன்றுகள்

காஞ்சிபுரம் மேல்கதிர்பூர் அரசு தோட்டக்கலை பண்ணையில், ஓட்டு ரக மா கன்றுகள், மானிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
காஞ்சிபுரம் அடுத்த மேல்கதிர்பூர் கிராமத்தில், 130 ஏக்கர் பரப்பளவில், அரசு தோட்டக் கலை பண்ணை செயல்பட்டு வருகிறது.

இங்கு, பூ மற்றும் பழ வகை செடிகள், விதைகள் ஆகியவை மானிய விலையில் விற்கப்படுகின்றன.

தற்போது, பங்கனபள்ளி, அல்போன்சா, இமாபசந்து, பெங்களூரா ஆகிய ஒட்டு ரக மா கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, மானிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து, தோட்டக் கலை பண்ணை உதவி வேளாண்மை இயக்குனர் ரமேஷ் கூறியதாவது:

  • தற்போது, பங்கனபள்ளி, அல்போன்சா, இமாபசந்து, பெங்களூரா ஆகிய ஒட்டு ரக மா கன்றுகள், மானிய விலையில், 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
  • இவைகளை, அடர்வு நெருக்கு என்ற புதிய தொழில் நுட்பத்தில், நடவு செய்ய, விவசாயிகளுக்கு அறிவுறுத்துகிறோம்.
  • ஒரு ஏக்கருக்கு, 400 கன்றுகள் தேவைப்படும்.
  • இவை, 3 ஆண்டுகளில், காய்க்கத் துவங்கும்.
  • மா கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள், காஞ்சிபுரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கோமதியை, 09442306201 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *