மாம்பழ ரகங்கள்: மாவில் நீலம், பெங்களூரா (தோத்தாப்புரி), அல்போன்சா, ரொமானி, பங்கனப்பள்ளி, பத்தர், செந்தூரா, மல்கோவா, மல்லிகா, சிந்து, ரத்னா உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் உள்ளன.
மல்லிகா, சிந்து போன்ற ரகங்கள் விதையில்லாத ரகங்கள்.
அல்போன்ஸா, பங்கனப்பள்ளி, தோத்தாப்பூரி ஆகிய பழங்கள் புதுச்சேரி மற்றும் விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகின்றன.
தானே புயல் காரணமாகவும், தட்டவெட்ப சூழ்நிலை மாற்றத்தாலும் மாமரத்தில் தற்போது இயல்பாகவே பூக்கள் குறைவாக உள்ளன.
பூக்கள் வருவதற்கு..:
- மாமரங்களில் பூக்கள் நன்றாக வருவதற்கு ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் யூரியாவை கலந்து தேவையான அளவுக்கு தண்ணீர் விட வேண்டும்.அப்போது பூக்கள் நன்றாக வரும்.
- பிப்ரவரி 29-ம் தேதிக்கு மேல் தட்வெட்ப நிலை மாறும் சூழல் இருப்பதால் அத் தேதிக்கு பிறகு இதுபோல் யூரியா கலந்த தண்ணீரை விடக் கூடாது.
இவ்வாறு பூக்கள் வரும்போது அதனை சில பூச்சிகள் தாக்குகின்றன.இந்த பூச்சி தாக்குதல் குறித்தும், இந்த தாக்குதலில் இருந்து பூச்சிகளை கட்டுப்படுத்துதல் குறித்தும் பெருந்தலைவர் காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் வல்லுநர் என்.விஜயகுமார் கூறியது:
தற்போது மா மரங்களை தத்துப்பூச்சி, சூட்டிமோல்ட், ஆந்த்ராக்னோஸ் ஆகிய பூச்சிகள் தாக்குகின்றன. புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மா மரங்களில் இதுபோன்ற பூச்சி வகைகள் அதிகம் காணப்படுகின்றன.
முறையான மருந்துகள் தெளிப்பதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்த முடியும்.
தத்துப்பூச்சி:
- இவ்வகை பூச்சிகள் ஒரு உமிழ்நீரை பூவில் சுரக்கும்.
- இதன் காரணமாக பூ பழுப்பு நிறமாக மாறிவிடும்.
- இதனால் பூவில் மகரந்த சேர்க்கை நடைபெறாமல் மகசூல் பாதிக்கும்.
- புவியில் அதிக வெப்பம், காற்றில் அதிக ஈரப்பதம் ஆகிய காரணங்களால் இவ்வகை பூச்சிகள் உருவாகின்றன.
- இவ் வகை பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டருக்கு 5 மி.லி வேப்ப எண்ணெய் கலந்து, இவற்றுடன் அசிட்டேட் 75 எஸ்பி ஒரு கிராம் சேர்த்து, பூவின் மேல் அடிக்க வேண்டும்.
- அவ்வாறு அடிக்கும்போது வேகமாக அடிக்கக் கூடாது. வேகமாக அடித்தால் பூக்கள் கொட்டிவிடும்.
- அதேபோல் ஒரு லிட்டர் தண்ணீருடன் 5 மி.லி வேப்ப எண்ணெய் கலந்து கார்பைல்-50 டபிள்யு பி என்ற மருந்தை 2 கிராம் சேர்த்தும் தெளிக்கலாம்.
- பெவேரியா பேஸியான என்ற உயிர்ரக பூஞ்சான் மருந்தை ஒரு ஏக்கருக்கு 4 கிலோ என்ற விகித்தில் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
- இது புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் கிலோ ரூ.120-க்கு கிடைக்கிறது.
சூட்டி மோல்ட்:
- மாவுப் பூச்சி எனப்படும் பூச்சிகள் மாமர இலைகளைத் தின்று பின்னர் தேன் போன்ற திரவத்தை இலை மற்றும் பூக்கள் மீது பரவவிடுகின்றன. இதனால் பூக்கள் பாதிக்கும்.
- இதனை கட்டுப்படுத்த ஒரு கிலோ மைதா அல்லது ஸ்டார்ச்சை ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.
- லேசாக ஆறிய பின் இதனை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் பாஸ்கோ மிடான் 40 எஸ்.என். என்ற மருந்தையும் கலந்து தெளிக்க வேண்டும்.
ஆந்த்ராக்னோஸ்:
- இந்த பூச்சி தக்குதலால் மா-வின் காம்பு, இலை ஆகியவற்றில் நுணி கருகும்.
- இவற்றை தடுக்க ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் கார்பன்டாஸிம் மற்றும் மேன்கோ செப் கலந்து தெளிக்க இவ்வகை பூச்சி தாக்குதலை தடுக்கலாம் என்றார்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
IMAM PASADU TREE
மாமரத்தில் பட்டையை ஊடுருவும் புழு