மாம்பழம் கெட்டு போகாமல் தடுப்பது எப்படி

அறுவடைக்குப் பின் மாம்பழங்கள் சேதம் அடையாமலும், கோடையில் கெட்டுப் போகாமலும் தடுப்பது எப்படி என, வேளாண் பல்கலைக்
கழக பேராசிரியர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
மாங்காய்கள் உற்பத்தியாவதற்கு மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றன.ஆனால், அவை நன்கு முற்றிய உடன் விரைவில் பழுத்து உண்பதற்கு தயாராவதுடன், அதிக அளவில் சேதாரங்களையும் ஏற்படுத்துகின்றன.இதைத் தடுக்க, அறுவடைக்குப் பின் அவற்றை
கையாளுவது மிக அவசியம்.
இதுகுறித்து, திருவூர் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் தேவநாதன், பேராசிரியர் முத்துராமலிங்கம் கூறியதாவது:

 • ஏப்ரல் மாதம் முதல், ஜூலை மாதம் வரை மா அறுவடை செய்யலாம்.
 • நட்ட முதல் மூன்று ஆண்டுகளில் வரும் பூக்களையும், காய்களையும் கிள்ளிவிட வேண்டும். நான்காம் ஆண்டிலிருந்து காய்களை
  அறுவடை செய்யலாம்.
 • நன்கு முற்றிய காய்களை விழாதவாறும், எந்தவித சேதாரம் ஏற்படாதவாறும் கவனமான அறுவடை செய்ய வேண்டும்.
 • வலை கட்டப்பட்ட திரட்டிகளைக் கொண்டு அறுவடை செய்தல் நல்லது.

மாங்காய்களை கையாளுதல்

 • அறுவடை செய்யப்பட்ட காய்களை குளிர்ச்சியான இடங்களில் வைக்க வேண்டும்.
 • சூரிய ஒளி, வெப்பமான இடங்களில் வைத்தல் கூடாது.
 • இவ்வாறு செய்வதால், காய்களில் நடக்கும் வேதிவினை மாற்றங்கள் தூண்டப்பட்டு விரைவில் பழுத்துவிடும்.
 • அதிக வெப்பத்தினால், காய்கள் சுருங்கி விடுவதுடன், காய்களின் மேல்பகுதியில் வடுக்கள் ஏற்படும்.

தரம் பிரித்தல்

 • நோய் தாக்கிய காய்களை தனியே பிரிப்பதன் மூலம், மற்ற காய்களுக்கு நோய் பரவாமல் தடுக்கப்படும்.
 • நன்கு பழுத்த பழங்கள், பாதி பழுத்த பழங்கள் மற்றும் பழுக்காத பழங்களை தனித்தனியே பிரித்து வைக்க வேண்டும்.ஏனெனில், இவற்றில் இருந்து வெளிவரும் எத்திலீன் வாயு, பழுக்காத பழங்களை விரைவில் பழுக்கச் செய்து விடும்.
 • காய்களின் காம்பிலிருந்து வெளிப்படும் பால், பழுத்தவுடன் கரும் புள்ளிகளை ஏற்படுத்தும்.
 • நோய் கிருமிகள் அந்த பகுதி வழியாக நுழைந்து, பழங்களை அழுக செய்து விடும்.இவ்வகையான பழங்களை தனியே பிரித்து எடுத்துவிட வேண்டும்.

பழுக்க வைத்தல்

 • மாங்காய்கள் நன்கு பழுப்பதற்கு, 25 டிகிரி சென்டிகிரேடு வெப்பமும், 60 டிகிரி ஈரப்பதமும்  வேண்டும்.
 • கால்சியம் கார்பைட் ரசாயனத்தை பயன்படுத்துதல் கூடாது.இவ்வாறு பழுக்கச் செய்வது சட்டப்படி குற்றமாகும்.
 • வெந்நீரில் மாங்காய்களை, 5 நிமிடம் அமிழ்த்தி எடுப்பதன் மூலம், பழங்கள் துரிதமாக பழுப்பதுடன், கெட்டுப் போகாமலும் பாதுகாக்கப்படுகின்றன.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *