மாம்பழ ஈக்களை கட்டுப்படுத்தும் இனக்கவர்ச்சி பொறி

  • மாங்காய்கள் முற்றிய பருவத்தில் ஈ பூச்சியானது காய்களில் உட்கார்ந்து மெல்லிய துளையிட்டு ஆயிரக்கணக்கான முட்டைகள் இடும்.
  • இதனால் மாங்காய்களின் மேல்புறத்தில் தோல் பகுதியிலிருந்து பிசின் போன்ற திரவம் வடியும்.
  • தாக்கப்பட்ட பழங்களின் சதைப்பகுதியில் சிறிய புழுக்கள் தோன்றி பழத்தை அழுகச்செய்யும்.
  • கோடை மழை பெய்யும் போது மண்ணில் புழுவாக இருக்கும் இந்த பூச்சியானது மழை ஈரத்தை பயன்படுத்தி புழுவில் இருந்து வெளி வந்தவுடன் மாங்காய்கள் அல்லது பழங்களைத் தாக்கி அழுக செய்துவிடும்.இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
  • எனவே, இந்த தாக்கத்தைக் கட்டுப்படுத்த ஆண் ஈக்களை இனக்கவர்ச்சி பொறி மூலம் கவர்ந்திழுப்பதன் மூலம் ஈக்களை அழிக்க முடியும்.இதனால் மாம்பழம் சேதம் அடைதல் முற்றிலும் தடுக்கப்படுகிறது.
  • இந்த இனக்கவர்ச்சி பொறி ஒரு ஏக்கருக்கு 4 அல்லது 5-ஐ வைக்க வேண்டும்.
  • அப்போது பொறியில் இருக்கும் மீனதல் யூஜினால் மருந்து மூலம் பூச்சிகள் கவர்ந்து இழுக்கப்பட்டு அழிக்கப்படுகிறது.

இவ்வாறு கன்னியாகுமரி அரசு தோட்டக்கலைத் துறை அலுவலர் ப.குமரேசன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி உள்ளார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *