கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் மாம்பழ பூச்சிகளைக் கட்டுப்படுத்த இலவச செயல் விளக்கம் நடத்தப்படும். டாக்டர் பெருமாள் வேளாண்மை அறிவியல் மையம், தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறையின் சார்பில் ஆத்மா திட்டம் ஆகியன இணைந்து மாம்பழ பூச்சி அழிக்கும் செயல் விளக்கத் துவக்க விழா மூங்கில்புதூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தத்துப்பூச்சி, பழ ஈ, மாவுப் பூச்சி, தண்டு துளைப்பான் பூச்சிகளால் மா பாதிக்கப்பட்டாலும், பழ ஈ முதிர் தருவாயில் உள்ள காய்களைத் தாக்கி ஊற்பத்தியை 30 சதவீதம் குறைத்து இழப்பை ஏற்படுத்தும்.
பழ ஈ பூச்சியின் தாக்குதல் ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் அதிகமாகக் காணப்படும்.
பழ ஈ பூச்சியைக் கட்டுப்படுத்துவது குறித்து இலவச செயல்விளக்கம் அளிக்க ரூ.1 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏக்கருக்கு 6 இனக்கவர்ச்சி பொறி வைக்கப்பட்டு, மா பழ ஈ பூச்சி அழிக்கப்படுகிறது. அனைத்து வட்டாரங்களிலும் இந்த செயல்விளக்கம் செய்துக் காட்டப்படும் என்றார்.
மேலும் விவரங்களுக்கு: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்