மா அறுவடைக்குப்பின் தொழில்நுட்பம்

மா முன்பருவ அறுவடை துவங்கியுள்ளதால் விவசாயிகள் போதிய தொழில்நுட்ப முறைகளை கடைபிடிக்குமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

 • அறுவடையின் போது மாங்காயின் காம்பு தளர்ச்சி அடைந்து இருக்க வேண்டும்.
 • மா தோலின் நிறம் கரும் பச்சையில் இருந்து லேசாக பச்சையாக மாறியும், சதைப்பற்று லேசாக மஞ்சள் நிறமாக மாறியிருக்கும் நிலையில் அறுடை பணிகள் துவக்கப்பட வேண்டும்.
 • அறுவடை செய்த மாவை தரம் பிரித்து பிளாஸ்டிக் கிரேட்களில் அடுக்கி சந்தைக்கு எடுத்து செல்ல வேண்டும்.
 • விற்பனைக்கு ஏற்ப பழம் பழுக்க வைக்கும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்த வேண்டும்.
 • மாவின் காம்பை 10 முதல் 20 செ.மீ., தூரம் விட்டு மா அறுவடை செய்யும் கருவி மூலம் அறுவடை செய்ய வேண்டும்.இந்த முறையால் மாவின் பால் மா பழத்தோலின் மீது விழாமல் பாதுகாக்கப்படும்.
 • பால் தோலில் பட்டால் அந்த பகுதியில் கரும்புள்ளிகள் விழுந்து பழம் கெட்டு விடும்.
 • மா பழங்களை அறுவடை செய்யும் போது பழங்கள் கீழே விழுந்து காயம் அடையாமல் இருக்க வலையுடன் கூடிய அறுவடை கருவிகள் மூலம் அறுவடை செய்ய வேண்டும்.
 • மா பழங்களை அறுவடை செய்தவுடன் நேரடியாக சூரிய ஒளியில் படும்படி வைப்பதை தவிர்த்து, குளிர்ச்சியான இடங்களில் வைக்க வேண்டும்.
  சாக்கு பை, கூடைகள் ஆகியவற்றில் மாம்பழங்களை வைக்க கூடாது.
 • இதனால், பழங்கள் காயம் அடைய வாய்ப்பு உண்டு. பிளாஸ்டிக் கிரேட்சில் பழங்களை சேகரிக்க வேண்டும்.
 • காலை நேரத்தில் மா பழங்களை அறுவடை செய்து நிழல் பகுதியில் சேகரிக்க வேண்டும்.
 • வரையறுக்கப்பட்ட பேக்கிங் முறைகளை கையாண்டு ஒரே வரிசையில் ஒரே தரத்தில் பழங்களை காட்டன் அட்டை பெட்டிகளில் அடைக்க வேண்டும்.
 • மா பழங்களை காம்புடன் அறுவடை செய்தவுடன் அதில் வடியும் பால் மா பழங்களின் மேல் படாமல் இருக்க காம்பு பகுதி கீழ் புறமாக இருக்கும்படி பிரத்தியோக வலை பின்னப்பட்ட பகுதியில் (மூங்கில் தட்டி) 10 நிமிடம் வைத்து இருக்க வேண்டும்.
 • இதனால், மா பால் பழங்களில் மீது படாமல் தவிர்ப்பதால் பழ அழுகளில் இருந்து கட்டுப்படுத்த முடியும்.
 • மா பழங்களை 40க்கு 30 சைஸ் 10 செ.மீ., அளவு கொண்ட காட்டன் அட்டை பெட்டிகளில் ஒரே தரம் உள்ளவையாக அடுக்க வேண்டும்.
 • இந்த தொழில்நுட்ப முறைகளை விவசாயிகள் கடைபிடிப்பதன் மூலம் பழங்கள் அழுகள் மற்றும் சேதங்களில் இருந்து பாதுகாப்பாகவும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கும்.
 • பழங்களின் தரம் மற்றும் கவரும் விதத்தை பொருத்து மார்க்கெட்டில் சந்தை விலை நிர்ணயிக்கப்படுவதால் விவசாயிகளும் கூடுதல் லாபம் பெற முடியும்.

இவ்வாறு  வேளாண் அலுவலர் தாம்சன் வெளியிட்ட அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *