மா சாகுபடியில் அடர்நடவு முறை

  • அடர்நடவு முறையில் இரு அடுக்கு முறையில் 10x5x5 மீட்டர் இடைவெளியில் நெருக்கி மா நடவு செய்வதால் எக்டருக்கு 260 கன்றுகளை நடவு செய்யலாம்.
  • இரு அடுக்குகளுக்கு இடையில் 10 மீட்டர் இடைவெளி இருப்பதால் டிராக்டர் மூலம் மருந்து தெளிக்கவும், அறுவடை செய்யவும் இன்னும் பிற பயிர் பராமரிப்பு வேலைகளை செய்யவும் ஏற்றதாக இருக்கும்.
  • தற்போது அதிஅடர்நடவு முறையில் 3×2 மீட்டர் இடைவெளியில் ஒரு எக்டருக்கு 1666 மரங்கள் நடவு செய்வதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • டிசம்பர் – ஜனவரி மாதங்களில் 10 செ.மீ. அளவில் நுனிக்கவாத்து செய்வதன் மூலமாகவும் அதையொட்டி பேக்லோபூட்ரசால் 0.75 கிராம்/மரம் என்ற அளவில் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் ஊற்றுவதன் மூலம் இடைப்பருவ காய்ப்பை பெறலாம்.
  • இலைவழியாக 20 கிராம்/லிட்டர் தண்ணீர் அளவில் சல்பேட் ஆப் பொட்டாஷ் உரத்தினைப் பூக்கும் தருணத்திலும் பின் காய்பிடிப்பு தருணத்திலும் தெளிப்பதன் மூலமாக காய்பிடிப்பினை அதிகரிக்கச் செய்வதோடு விளைச்சலையும் அதிகரிக்கலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *