மாம்பழங்களை பழுக்க வைக்கும் புதிய சுகாதார முறை குறித்து கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை அலுவலர் குமரேசன் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
- அனைத்து மக்களாலும் விரும்பி உண்ணப்படும் பழங்களில் மாம்பழம் சிறந்து விளங்குகிறது.
- புதிய முறைப்படி மாம்பழங்களை பழுக்க வைக்க காற்றுப் புகாத அறைகளில் எத்திரல் என்ற வளர்ச்சி ஊக்கியை ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து 5 இடங்களில் வைக்க வேண்டும்.
- இந்த கலவையில் இருந்து எத்திலின் வாயு தேவையான அளவு வெளிவர ஒரு லிட்டர் கலவைக்கு 2 கிராம் சோடியம் ஹைட்ராக்சைடு மருந்தை கலக்க வேண்டும்.
- மாம்பழங்களின் ரகங்களைப் பொருத்து 12 மணி நேரம் முதல் 24 மணி நேரத்தில் நன்றாக பழுத்த பழங்களைப் பெறலாம்.
- இதற்கு தேவையான எத்திரல் வளர்ச்சி ஊக்கி உர விற்பனை நிலையங்களிலும், சோடியம் ஹைட்ராக்சைடு சாதாரண ரசாயான பொருள் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் என்றார் அவர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்