இப்போது மா மரம் பூ பூத்து குலுங்கும் காலம். சில மரங்களில் நிறைய பூவோடும், சில மரங்களில் பூ குறைவாகவும் இருக்கும்.
இதுபோல் குறைவாக பூ பூத்து இருக்கும் மரங்களில் அதிகளவில் பூ பூப்பதற்கு சில முறைகளை கையாண்டு பார்க்கலாம்.
- வயலுக்கு பயன்படுத்தப்படும் யூரியாவை ஐந்து கிராம் எடுத்து ஒரு லீட்டர் நீரில் கரைத்துக் கொள்ள வேண்டும்.
- ஐந்து கிராமுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
- அப்படி அதிகமாக எடுத்துக் கொண்டால் இலை கருகவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் கவனத்தோடு செயல்படவும்.
- இவ்வாறு கரைத்த நீரை தெளிக்கவும். குறிப்பிட்ட காலத்தில் நிறைய பூ பூக்கும்.
- ஏற்கனவே பூ பூத்துள்ள மரங்களில் உள்ள பூக்கள் கொட்டாமல் தடுக்கவும் வழி இருக்கிறது.
- இதற்கு பிளானபிக்ஸ் என்ற மருந்தை வாங்கி 4 மிலி எடுத்து பத்து லிட்டர் நீரில் கலந்து மரம் நனையும் படி தெளிக்கவும்.
- இதன் மூலம் மா பூ கொட்டுதலை தடுக்கலாம்.
- உங்களுக்கு பயிர் சார்ந்த சந்தேகம் இருந்தால் உடனே வேளாண் உதவி தொலைபேசி எண்களான 09791278194 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
தகவல்: செந்தில் குமார், ஆலோசகர், MSSRF
நன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையம
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்