மா மகசூலை பாதிக்கும் தத்துப்பூச்சிகள்

மா மகசூலை பாதிக்கும் தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு, தோட்டக்கலை கல்லூரி நிர்வாகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மா விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நவ, டிச, ஜன., மாதங்களில் மா பூக்கள் பூக்கும். மார்ச்சில் மா பிஞ்சாகவும், ஏப்ரல் மாதம் மாங்காய் வரும். மா மரங்களில் சில பகுதிகளில் தத்துப்பூச்சிகள் அதிகளவில் உள்ளது.

இவைகளை கட்டுப்படுத்த பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி நிர்வாகம் ஆலோசனை கூறியுள்ளது.

  • மா மரத்தை தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளில் முக்கியமானது மா தத்துப்பூச்சிகளாகும்.
  • “இடியோஸ்கோபஸ் நிவ்யோஸ்பார்சஸ்’, “அமீர்டோஸ் அட்கின்சோனி’ ஆகியவை தத்துப்பூச்சிகளின் வகைகளாகும்.
  • பூச்சிகள் தாக்கத்தால் பூங்கொத்தில் உள்ள பூ மொக்குகள் கருகி உதிர்ந்து விடும். பூங்கொத்துகள் வாடி காணப்படும்.
  • மா இலைகளில் தேன் போன்ற கழிவு திரவமும், கரும்பூஞ்சாணமும் தென்படும். பூச்சிகள் மரங்களில் அதிகளவில் இருந்தால் மா மகசூல் பாதிக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • பூக்கள் மலரும் சமயத்திற்கு இரண்டு வாரங்கள் முன்பாக பயிர்பாதுகாப்பினைத் தொடங்க வேண்டும்.
  • சிறிய மற்றும் பெரிய கிளைகளின் பட்டைகளில் பூச்சிமருந்து படுமாறு தெளிக்க வேண்டும்.
  • பூச்சிகளை நன்கு கலந்த பின்பு டீபால் ஒட்டு திரவம் கலந்து தெளிக்க வேண்டும்.
  • அடர்ந்து வளர்ந்துள்ள மரக்கிளைகளை கவாத்து செய்யவேண்டும்.
  • தோப்பில் களைகளை நீக்கி சுத்தமாக வைத்து, தத்துப்பூச்சிகளின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
  • மா பூக்கும் சமயத்தில் விளக்குப் பொறி எக்டருக்கு 1 என்ற எண்ணிக்கையில் வைத்து தாய் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
  • அசிபேட் 1 கிராம் ஒரு லிட்டர் நீரில் அல்லது பாசலோன் 2 மில்லி லிட்டர் ஒரு மில்லி லிட்டர் நீரில் கலந்து 10 நாட்டள் இடைவெளியில் மூன்று முறையாக மா பூ பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும்.
  • மா வடு வரும் நேரத்தில் கார்பரில் 2 கிராம் ஒரு லிட்டர் நீரில் அல்லது பென்தியான் 1 மி.லி கரைத்து தெளித்தும் தத்து பூச்சிகளை கட்டுப்
    படுத்தலாம், என தோட்ட கலைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *