சிவகங்கை மாவட்டம் எஸ். புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் மா சாகுபடி விவசாயிகள், கவாத்து முறை செயல்விளக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பதிவு செய்யலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித் துள்ளார்.இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
- மா மரங்களுக்கு சிறப்பான வடிவத்தையும், அதிக மகசூல் கிடைக்கவும் கவாத்து செய்வது அவசியம்.
- மூன்று ஆண்டுகளுக்குள்பட்ட மா மரங்களில் தரையிலிருந்து 3 முதல் 4 அடி உயரத்தில் இருந்து மூன்று கிளைகள் அனுமதித்து ஒவ்வொரு கிளைகளிலும் 3 அடி உயரத்தில் மேலும் 3 அல்லது 4 கிளைகள் அனுமதித்து கவாத்து செய்வதின் மூலம் சிறந்த மரத்துக்கான வடிவத்தை பெறலாம்.
- இதன்மூலம் மரங்களுக்கு உரமிடுதல், களையெடுத்தல் பண்ணை இயந்திரக்கருவிகளை பயன்படுத்துதல் போன்றவை எளிதாகும்.
- கவாத்து செய்யாவிட்டால் 5 ஆண்டுகளில் மரக்கிளைகள் பல கோணல்களாக வளர்ந்து சூரிய வெளிச்சம், தெளிவான காற்றோட்ட மின்றி பூக்கும் கிளைகள் குறைந்து மகசூலும் குறையும்.
- எஸ். புதூர் ஒன்றியத்தில் உள்ள 3 ஆண்டுகளுக்குட்பட்ட மாந்தோப்புகளில் மாமரம் கவாத்து செய்யும்முறை குறித்து செட்டிநாடு மானாவாரி வேளாண் ஆராய்ச்சி நிலைய தோட்டக்கலை பேராசிரியர், குன்றக்குடி தோட்டக்கலை பேராசிரியர், எஸ். புதூர் ஒன்றிய தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ஆகியோரால் வருகிற 2014 ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் மாந்தோப்பினை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து செயல்விளக்கம் அளிக்கவுள்ளனர்.
- எனவே மாங்கன்றுகள் நட்டுள்ள விவசாயிகள் செயல்முறை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எஸ்.புதூர் ஒன்றிய தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தங்கள் பெயர் மற்றும் முகவரியுடன் 22.08.2014-ந்தேதிக்குள் பதிவு செய்து பயனடைய லாம். விவரங்களுக்கு 09443925074, 09443869408 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Thank your information…..