மா மரத்தில் கவாத்து செய்ய புரூனர் கருவி

மாமரத்தில் கவாத்து செய்ய, புரூனர் (Pruner) கருவியை காந்தி கிராமம் பல்கலை வேளாண்மை அறிவியல் மையம் முதன்முதலாக தென் மாவட்டங்களில் அறிமுகப்படுத்தி உள்ளது.

  • தமிழகத்தில் கல்லாமணி, நீலம், பங்கனப்பள்ளி, செந்துாரா, காலப்பாடு போன்ற மா ரகங்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.
  • திண்டுக்கல் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மகசூலை அதிகரிக்க, மா மரங்களில் பூ பூப்பதற்கு 3 மாதத்திற்கு முன், கவாத்து செய்யப்படுகிறது.
  • கவாத்து மூலம் செடிகளில் காய்ந்துள்ள கிளைகள், நோய் தாக்கிய கிளைகள் அகற்றப்படுகின்றன. இதற்கு விவசாயிகள் அரிவாளை பயன்படுத்தி வருகின்றனர்.
  • அரிவாளை பயன்படுத்துவதால், கிளைகளில் பாதிப்பு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படுகிறது.
  • நோய் தொற்று ஏற்படாமல் கவாத்து செய்ய, புரூனர் கருவியை, காந்தி கிராம பல்கலை வேளாண்மை அறிவியல் இயக்கம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் 2 வகை உள்ளன.
Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் செந்தில்குமார் கூறியதாவது:

  • புரூனர் கருவி தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, தென்மாவட்டங்களில் முதன்முதலாக திண்டுக்கல்லில் அறிமுகப்படுத்தி உள்ளோம்.
  • இந்த கருவியை பயன்படுத்தி கவாத்து செய்தால், ஆண்டுதோறும் நல்ல மகசூல் கிடைக்கும்.
  • தேவையான கிளைகள் அகற்றப்படுவதால், ஒரு பழத்தின் எடை ஒரு கிலோ வரை இருக்கும்.
  • ‘புரூனர்’ கருவியை பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம், என்றார்.
  • இந்த கருவியின் விலை ரூ.2,300.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “மா மரத்தில் கவாத்து செய்ய புரூனர் கருவி

  1. Ravi Shenbagam says:

    தகவலுக்கு நன்றி … தகவல் சம்பந்த பட்ட துறை தொலைபேசி எண் அல்லது தொடர்பு பற்றிய விவரங்கள் பதிவிட்டால் மேலும் பயனுள்ளதாக அமையும் .. நன்றி

    தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் செந்தில்குமார் அவர்கள் தொலைபேசி எண் அல்லது தொடர்பு பற்றிய விவரங்கள் தேவை … நன்றி

    • gttaagri says:

      அன்புள்ள ரவி,

      காந்தி கிராம் பல்கலை கழகம் தொலைபேசி எண் 0451-2452371 இங்கே தொடர்பு கொண்டால் அவர்கள் உதவுவார்கள்
      நன்றி அட்மின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *