மனிதனின் பேராசையும் அழிக்கும் குணமும் உலகத்தில் உள்ள எல்லா உயிர் இனங்களுக்கும் கெடுதலாக ஆகி வருகிறது
அதுவும் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட தகவல் தொழிற்நுட்பம் இப்போது கடலில் எந்த இடத்தில மீன்கள் கிடைக்கும் real time தெரிகிறது. ஆப்ரிக்காவில் எந்த இடங்களில் யானைகள் இப்போது இருக்கின்றன என்று தெரிகிறது.
யானைகள் மிகவும் அறிவு மிகுந்த மிருகங்கள் என்று நமக்கு தெரியும். நம் இந்திய கலாச்சாரத்தில் யானைக்கும் பிள்ளையாருக்கும் உள்ள முக்கியத்துவம் அதிகம்
இந்த யானைக்கு பாவம் கடவுள் தந்தத்தை கொடுத்து தொலைத்து விட்டான்.
இந்த தந்ததில் எந்த பொருட்கள் செய்ய கூடாது என்று உலக அளவில் தடை இருந்தாலும் உலக பணக்கார மனிதர்கள் தந்ததில் செய்ய பட்ட பொருட்களை வாங்க தயார்
இதன் விளைவு ஆப்ரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் 2/3 யானைகள் அழிக்க பட்டு விட்டன என்று UK வில் உள்ள கார்டியன் பத்திரிக்கை சொலுகிறது.
10 ஆண்டுகளில் இந்த அளவு மனிதனால் அழிக்க முடியும் என்றால் இன்னும் 10 ஆண்டுகளில் காட்டு யானைகள் எல்லாம் அழிந்து விடும். மிருக காட்சி சாலையில் தான் இந்த கம்பீரமான புத்தி உள்ள மிருகங்களை பார்க்க முடியும் போல் இருக்கிறது
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்