“கடவூர் பகுதியில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காப்புக்காட்டை அரியவகை உயிரினமான தேவாங்குகளுக்கான (Slender Loris) சரணாலயமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
2016-17 ம் ஆண்டு தேவாங்கு கணக்கெடுப்பின்படி 3,200 தேவாங்குகள் இப்பகுதியில் உள்ளதால், அதனை பாதுகாக்க இந்த காப்புக்காடு பகுதியினை சரணாலயமாக மாற்றி அமைக்க வேண்டும் என்று வனத்துறையினரால் கோரிக்கை வைக்கப்பட்டது.ஒரு அடி வரை வளரும் இவை, மரங்கள் மேலே வாழும். மெதுவாகத்தான் நகரும். பூச்சிகள், செடிகள் எல்லாவற்றையும் தின்னும்,
இவை இருட்டில் வெளி வரும். இருட்டுக்கு சாதகமாக கண்கள் பெரிதாக இருக்கிறது.
கரூர் மாவட்டத்தின் தெற்கு எல்லையாக அமைந்துள்ளது கடவூர். இந்தப் பகுதியைச் சுற்றி வட்டவடிவில் மலைகள் அமைந்துள்ளன. இந்த மலைகளில் காப்புக்காடுகள் அமைந்துள்ளன. இந்த மலைப்பகுதியில் அரியவகை உயிரினமான தேவாங்குகள் அதிகம் வசிக்கின்றன. `இங்கு வசிக்கும் தேவாங்குகளைப் பாதுகாக்க சரணாலயம் அமைக்க வேண்டும்’ என்று சமூக ஆர்வலர்கள் தொடர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால், அதற்கான எந்த நகர்வும் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில்தான், கரூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றிருக்கும் பிரபுசங்கர் திடீரென கடவூர் மலைக்கு அதிகாரிகள் சகிதம் விசிட் அடித்தார். இங்குள்ள மலையில் இருக்கும் வாலறும்பு அருவியை முதலில் பார்வையிட்டார். அந்த அருவியில் வரும் தண்ணீரைக் குடித்துப் பார்த்து ஆய்வு செய்தார். அந்த இடத்தை சுற்றுலா தலமாக மாற்ற மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர்,“கடவூர் பகுதியில் உள்ள காப்புக்காடுகள், தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. இந்த சாலைப்பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வாலறும்பு அருவி. அழகான, இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் இந்த அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் பொதுவாக செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிக அளவில் நீர் வரத்து இருக்கும் என்று வனத்துறை அலுவலர்களால் கூறப்படுகிறது.
மேலும், இங்கு அரியவகை உயிரினமான தேவாங்குகள் உள்ளதாகவும், கடந்த 2016-17-ம் ஆண்டு தேவாங்கு கணக்கெடுப்பின்படி 3,200 தேவாங்குகள் இப்பகுதியில் உள்ளதால், அதனை பாதுகாக்க இந்த காப்புக்காடு பகுதியினை சரணாலயமாக மாற்றி அமைக்க வேண்டும் என்று வனத்துறையினரால் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனால், கரூர் மாவட்டத்தில் அரியவகை உயிரினமான தேவாங்குகள் வாழும் பகுதியாக இருக்கக்கூடிய இந்தக் காப்புக்காட்டினை தேவாங்குகளுக்கான சரணாலயமாக மாற்றுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்து, ஒரு வருட காலத்திற்குள் சரணாலயமாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இவை வேட்டை மற்றும் காட்டு அழிப்பு மூலம் குறைந்து வருகின்றன. இவற்றை காப்பது நம் கடமை
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்