பூச்சிக்கொல்லி மருந்தால் 50 சதவீதம் அழிந்த தேவாங்குகள்

திண்டுக்கல் காந்திகிராமம் பல் கலைக்கழகமும், ‘சீட்ஸ்’ தன்னார்வ நிறுவனமும் இணைந்து நடத்திய கணக்கெடுப்பில் தேவாங்குகளின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

குரங்கினங்கள் மிகவும் அறிவுத் திறன் படைத்தவை. உலகளவில் 800-க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் குரங்குகளில் காணப்படுகின்றன. இவற்றில் குட்டித் தேவாங்கு என அழைக்கப்படும் ‘லாரிஸ் லைடிக் கெரியானஸ்’ தேவாங்குகள் இந்தி யாவில் கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடரின் மழை மறைவுப் பிரதேசங்களில் குறிப்பாக தமிழகம், ஆந்திரம், கேரள வனப் பகுதிகளில் காணப்படுகின்றன.

சர்வதேச அளவில் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் வனப் பகுதியில் இந்தத் தேவாங்குகள் அதிகளவில் காணப்படுகின்றன. இவை இந்தியாவைப் பூர்வீக மாகக் கொண்டவை என்றாலும், இலங்கையில் சில பகுதிகளில் காணப்படுவதாக ஆராய்ச்சி யாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தற்போது பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பின் அறிக்கை யின்படி இந்தத் தேவாங்கு இனம் அழிந்துவரும் விலங்குகளின் பட்டி யலில் இடம்பெற்றுள்ளது. அதனால் இந்த தேவாங்குகளைப் பாதுகாக் கவும், பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தவும் இவற்றை கணக்கெடுக்கும் பணியில் திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் பல்கலைக்கழக உயிரியல் துறை யும், ‘சீட்ஸ்’ தன்னார்வ நிறுவனமும் இணைந்து ஈடுபட்டன.

இதுகுறித்து காந்திகிராமம் பல்கலைக்கழக உயிரியல் துறை பேராசிரியர் ராமசுப்பு கூறியதாவது: பெரும்பாலும் தேவாங்குகள் 4 முதல் 7 என்ற எண்ணிக்கை அளவிலேயே குழுக்களாக செயல் படுகின்றன. அய்யலூர் வனப் பகுதியில் இவை ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சராசரியாக 4 என்ற எண்ணிக்கை அளவில் இருந்தன. தற்போது 2 என்ற எண்ணிக்கையில் 50 சதவீதமாக குறைந்துவிட்டன.

தேவாங்குகளில் பெண் இனத்தின் எண்ணிக்கை ஆண் இனத்தை விட குறைந்துவிட்டன. ஆண், பெண் இனச் சேர்க்கை ஆண்டுக்கு இருமுறை என்றாலும் ஒருமுறை மட்டுமே இந்த தேவாங்குகள் கருவுறுகின்றன.

170 நாட்கள் கர்ப்ப காலத்துக்குப் பின்னர், இரு குட்டி களை ஈனுகின்றன. தற்போது கணக்கெடுப்பில் ஒற்றைக் குட்டியுடனேயே தேவாங்குகள் இருந்தன. அதற்கான காரணங்களை ஆய்வு செய்துவருகிறோம்.

Courtesy: Hindu
Courtesy: Hindu

காய்கறி மற்றும் தோட்டப் பயிர் களைத் தாக்கும் வெட்டுக்கிளி மற்றும் கம்பளிப் பூச்சிகளின் எண்ணிக்கையை இவை கட்டுப்படுத்து கின்றன. ஒரு சில எலி வகைகளையும் சாப்பிடுவதன் மூலம் அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்து வதில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. தோட்டப் பகுதிகளில் அதிகளவு இரை தேடும் இவை, தேள்களின் அளவை குறைத்து விவசாயிகளுக்கு உதவுகின்றன.

இவை மனிதர்கள் பயிரிடும் எந்தப் பயிர்களையும் அழிப்பதில்லை. காடுகளில் இவற்றின் எண்ணிக்கை குறைவதற்கு வேட்டையாடுதல் முக்கிய காரணமாகக் கருதப்பட்டாலும் தோட்டப் பயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகள் மூலம் அதிகளவு அழிகின்றன.

வெளிநாடுகளில் மருத்துவத் துறையில் உடல்கூறு ஆராய்ச்சிக்காகவும், ஊக்க மருந்து தயாரிப்புக்காகவும், மாந்திரீககாரியங் களுக்காகவும் இவை தமிழகத்தில் இருந்து கடத்தப்படுகின்றன.

இவற்றின் தோலில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் திரவம் மூலம் தொழுநோய் மற்றும் முடக்குவாதம் தீரும் என்பது போன்ற மூட நம்பிக்கைகளுக்காக இவை வேட்டையாடப்படுகின்றன. காடுகளுக்கு நடுவே செல்லும் சக்தி வாய்ந்த மின் வயர்களில் இவை அடிபட்டும் இவற்றின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் வனப்பகுதியில் ‘டார்ச்’ விளக்கின் வெளிச்சத்தில் இரவில் நடைபெற்ற தேவாங்கு கணக்கெடுப்பு. (வலது) கணக்கெடுப்பின் போது காணப்பட்ட தேவாங்கு.

பாறை இடுக்குகள், முட்புதர்கள், இலையுதிர் காடுகள், வறண்ட நிலங்கள் மற்றும் பூச்சிகள் நிறைந்த கள்ளிக் காடுகளில் தேவாங்குகள் வாழ்கின்றன. பூச்சிகளை முக்கிய உணவாக சாப்பிடும் இவை பகலில் தூங்கும் இயல்பைக் கொண்டவை. இரவில் தனித்து வேட்டையாடும் “என்றார்.

நன்றி: ஹிந்து

வெளிநாடுகளில் தடை செய்ய பட்ட பூச்சி மருந்துகளை பயன் படுத்துவது,  அளவுக்கு அதிகமாக பல தடவை சக்தி வாய்ந்த மருந்துகளை பயன் படுத்துவது என்று பல வகைகளில் நாம் ரசாயன விவசாயத்திற்கு மாறி  விட்டோம். திராட்சை, கோஸ், கோபி, வெண்டை, கத்திரி போன்ற காய்களில் அளவுக்கு அதிகமாக விஷம்.

இப்போது இந்த விஷங்கள் நம்மை மட்டும் இல்லாமால் இயற்கையின் நம் சக மிருகங்களையும் அழித்து கொண்டு வருகிறது என்பது வருத்தம் தரும் தகவல். இயற்க்கை வேளாண்மை மட்டுமே இதற்கு பதில் ஆக இருக்க முடியும்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *