உலகமெங்கும் காட்டு மிருகங்கள் சீன மருத்துவம், பேஷன் போன்ற காரணங்கள் காரணமாக அழிக்கபட்டு வருகின்றன.
உலகத்தில், மனிதனின் பேராசை மூடத்தனத்தால் அழிந்து வரும் காட்டு மிருகங்களை பார்ப்போமா?
புலி (Tiger)
புலியின் எலும்புகள், பித்தப்பை போன்றவை சீன மருத்தவத்தில் பயன் படுத்த பட்டன. ஒரு காலத்தில் அதிகமாக புலிகள் இருந்த பொது இது சரியாக இருந்தது. இப்போது காட்டில் வெறும் 3200 புலிகளே மிச்சம். இதனால் மட்டும் ஆண்டுக்கு 6 பில்லியன் டாலர் வர்த்தகம்..
புனுகு பூனை (Musk deer)
இந்தியா பாகிஸ்தான் பர்மா போன்ற இடங்களில் காணப்படும் இந்த அரிதான பூனையை கொன்று புனுகு தயாரிக்கிறார்கள். பல பூனைகளை போன்றால் தான் சிறிது அளவு புனுகு கிடைக்கும். மேற்கு தொடர்ச்சி மலைகளில் சில இடங்களில் மட்டுமே இவை இப்போது உள்ளன. புனுகு வாசனை பொருளாக பயன் படுகிறது
சூரிய கரடிகள் (Sun bears)
இந்த கரடிகளின் பித்த பைகள் சீன மருத்தவத்தில் மருந்தாக பயன் பட்டன. இதனால் பங்களாதேஷ், சீன, பர்மா போன்ற பல நாடுகளில் இவை அழிக்க பட்டு விட்டன. எத்தனை கரடிகள் காடுகளில் மிச்சம் இருக்கின்றன – என்பது கடவுளுக்கே வெளிச்சம்!
சுண்டா பங்கொலின் (Sunda Pangolin)
எறும்பு தின்னிகளான இந்த சாதுவான மிருகங்களுக்கு மிகவும் பிடித்த உணவு – கரையான். நீண்ட நாக்கு கொண்டு பசையான நாக்கில் ஓட்டும் எறும்புகளை தின்னும். சீன மருத்துவம் மற்றும் பேஷன் காரணம் கொண்டு அழிக்க பட்டன. கடந்த 15 ஆண்டுகளில் இவற்றின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டது.
பர்மா மலை பாம்பு (Burmese Python)
ஒரு காலத்தில் மலை பாம்பு கண்டு பயந்த மனிதன் இப்போது இவற்றை பேஷன் தொழிலின் தேவைக்காக ஒழித்து வருகிறான். பெண்களின் கைப்பை, செருப்பு, கோட் போன்றவற்றுக்கு மலைப்பாம்பின் தோல் பயன் படுத்தப்பட்டு மிக அதிக விலை போகின்றது. பர்மாவில் இவை வேகமாக அழிந்து வருகின்றன. மலைப்பாம்பு தொழில் தயாரிக்க படும் ஒரு பர்ஸ் $15000 வரை விலை போகுமாம்!
மேலும் பார்போம்..
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்