இயற்கை முறையில் மிளகாய் சாகுபடி

இயற்கை முறையில், மணப்பாறை மிளகாய் சாகுபடி செய்து, வருமானம் ஈட்டி வரும், தஞ்சாவூர் மாவட்டம், வீரப்புடையான் பட்டியைச் சேர்ந்த விவசாயி, ஜேம்ஸ் ராஜ் கூறுகிறார் :

  • 10ம் வகுப்பு வரை படித்த நான், விவசாயத்துக்கு வந்து விட்டேன். ‘போர்வெல்’ பாசனம் வாயிலாக, செம்மண் பூமியான, 1 ஏக்கர் நிலத்தில் நாட்டு மிளகாயும், 1 ஏக்கரில், விருட்சி பூவும் சாகுபடி செய்தேன்.ரசாயன உரம், பூச்சிக்கொல்லி என, சாகுபடி செலவு அதிகரித்து வருவதால், மிளகாய் சாகுபடியை பலர் கை விட்டனர்.
  • ஆனால், லாபம் குறைந்தாலும் பரவாயில்லை என, மிளகாயை சாகுபடி செய்து வருகிறேன். ரசாயன உரம் போட்டாலும், ஆட்டுக்கிடையையும் அடைத்து, சாகுபடி செய்வதால் சமாளிக்க முடிகிறது.
  • கொஞ்சம் கொஞ்சமாக ரசாயன உர பயன்பாட்டை குறைத்து, இப்போது முழு இயற்கைக்கு மாறிட்டேன்;
  • இயற்கை முறையில் நல்ல விளைச்சல் கிடைக்கிறது.மிளகாய் நடவு செய்த, 65ம் நாளில் காய்க்க துவங்கியது. ஆனால், காய வைத்து, மிளகாய் வற்றலாக விற்பனை செய்ய முடிவு செய்ததால், செடியிலேயே பழுக்க விட்டேன்.
  • 85ம் நாள் முதல் பறிப்பில், 40 கிலோ பழம் கிடைத்தது. அதை வெயிலில் காய வைத்த பின், 30 கிலோ மிளகாய் வற்றல் கிடைத்தது.மேலும், 105வது நாளில் ஒரு பறிப்பு, 125ம் நாளில் ஒரு பறிப்பு என, இதுவரை, 250 கிலோ மிளகாய் வற்றல் கிடைத்து உள்ளது.
  • அதை கிலோ, 110 ரூபாய்க்கு விற்பனை செய்ததில், 27 ஆயிரத்து, 500 ரூபாய் வருமானம் கிடைத்து உள்ளது.உழவு முதல் அறுவடை வரை, 20 ஆயிரம் ரூபாய் வரை செலவானது.
  • அது போக, 7,500 ரூபாய் லாபமாக கிடைத்துள்ளது. இன்னும் நாலைந்து மாதத்திற்கு மகசூல் கிடைக்கும். குறைந்தபட்சமாக, 400 கிலோவுக்கு மேல், மிளகாய் வற்றல் கிடைக்கும்;
  • அதுமூலமாக, 44 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். இதற்கு இடுபொருள், அறுவடை எல்லாம் சேர்த்து, 5,000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். எப்படியும், 40 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைத்துவிடும்.
  • இயற்கை முறையில் சாகுபடி செய்த இந்த நாட்டு ரக மிளகாயில், சொத்தை காயே இல்லை. விதைக்கட்டு, பருமனான காம்புகளோடு இருப்பதுடன், காரமும் சுள் என உள்ளது. இதை உபயோகப்படுத்தி பார்த்தவர்கள், என் வீட்டுக்கே தேடி வந்து வாங்கி செல்கின்றனர்.

தொடர்புக்கு: 9787059060 .

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *