காளையார்கோவில் அருகே இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் புல்லட் ரக மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சூசையப்பர்பட்டணத்தைச் சேர்ந்த விவசாயி கே.அருள்தாமஸ், கிணற்று பாசனம் மூலம் மரவள்ளி கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, மிளகாய், தக்காளி போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்.
இவர் 20 சென்டில் இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் புல்லட் ரக மிளகாயை சாகுபடி செய்துள்ளார்.
சொட்டுநீர் அமைப்பு, ‘மல்சிங் சீட்’ பயன்படுத்தியுள்ளதால் களைகள் வளரவில்லை. மேலும் உரங்கள், ஊட்டச்சத்துகள் சொட்டுநீர் மூலமாகவே பாய்ச்சியதால், செடிகள் பருத்து காணப்படுகின்றன. இதனால்
விளைச்சலும் அமோகமாக உள்ளது.
அருள்தாமஸ் கூறியதாவது:
- 20 சென்டில் மிளகாய் சாகுபடிக்கு 15 கிராம் விதை இருந்தால் போதும். ‘மல்சிங் சீட்,’ விதை உட்பட 10 ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளது.
- சொட்டுநீர் பாசனம் அரசு மானியத்தில் வாங்கினோம்.
- களை வளராததால் களையெடுப்பு கூலி மிச்சம்.
- வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். 90 நாட்களில் இருந்து மிளகாய் பறித்து வருகிறோம். மிளகாய் நல்ல விளைச்சல் கண்டுள்ளது.
- வாரத்திற்கு இரண்டு முறை பறிக்கிறோம். வாரத்திற்கு 150 கிலோ கிடைக்கிறது. ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
- தொடர்ந்து 10 மாதங்களுக்கு மிளகாய் பறிக்கலாம்.
- இஸ்ரேல் தொழில்நுட்பத்தால் குறைந்த செலவில் அதிக லாபம் எடுக்கலாம். இதே தொழில்நுட்பத்தில் தற்போது 30 சென்டில் கத்தரி சாகுபடி செய்துள்ளோம், என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்