போதிய உலர் களம் இல்லாததால் அறுவடை செய்யும் மிளகாய்களை மண் தரைகளில் கொட்டி காயவைப்பதால் அவற்றின் தரம், நிறம் குறைகிறது.
முதுகுளத்தூர் அருகே காக்கூர், கீழத் தூவல், பொன்னக்கனேரி, தேரிரு வேலி, உலையூர், கோடாரேந்தல், ஆதனக் குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கிட்டதட்ட 3 ஆயிரம் ஏக்கரில் விவ சாயிகள் மிளகாய் சாகுபடி செய் துள்ளனர்.
இவை தற்போது அறுவடை யாகி வருகிறது. அப்பகுதிகளில் போதிய உலர் களங்கள் இல்லாததால் மிளகாய்களை சாலையோரம் மணல் தரையில் பரப்பி காய வைக்கின்றனர். இதனால் மிளகாய்களின் நிறம், தரம் குறைகிறது.
இவற்றை அடிமாட்டு விலைக்கு வியாபாரிகளிடம் விற்பனை செய்யவேண்டிய நிலை விவசாயி களுக்கு ஏற்படுகிறது.
இவற்றை தவிர்க்கும் விதமாக வரும் காலங்களில் போதிய உலர் களங்கள் அமைத்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வெங்கலகுறிச்சி விவசாயி குமார் கூறுகையில், “” புதிய மிளகாய் வத்தல் தரத்தை பொறுத்து கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனையாகிறது. பழைய மிளகாய் வத்தல் கிலோ ரூ. 90 க்கு விற்பனையாகிறது. சோடை வத்தல் கிலோ ரூ.70க்கு விற்பனையாகிறது. பனிக்காலம் என்பதால் மண் தரைகளில் உலர்த்தும் மிளகாய் சோடை வத்தலாக மாறுகிறது. இவை குறைந்த விலைக்கு வியாபாரிகளிடம் விற்பனை செய்வதால் பலத்த வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நெல் கொள்முதல் செய்வதுபோல் மிளகாய் வத்தலையும் விலை நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்யவேண்டும்,” என்றார்.
நன்றி: தினமலர்
சூரிய ஒளி மூலம் மின்சாரம் தேவை இல்லாமல் உலர் களங்கள் இந்தியாவில் கிடைக்கின்றன. சாம்பிள் இதோ.. இவற்றை பயன் படுத்தினால் இந்த பிரச்னை நிச்சியம் குறையும்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்