மிளகாய் சாகுபடியில் பூக்கும் பருவத்தில் பூ மொட்டுகளும், பூக்களும் உதிர்வதை தடுக்க பிளானோபிக்ஸ் எனப்படும் பயிர் வளர்ச்சி ஊக்கி மருந்தை பயன்படுத்த வேண்டும் என தோட்டக் கலை உதவி இயக்குநர் எஸ். ஆறுமுகம் புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியது:
- நயினார்கோவில் ஒன்றியத்தில் இந்த ஆண்டு 1,550 ஹெக்டர் பரப்பளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மிளகாய் பயிர் பூக்கும் பருவத்தில் உள்ளது.
- இந்த சமயத்தில் பூ மொட்டுகளும், பூக்களும் சில இடங்களில் பிஞ்சுகளும் உதிர்வதால் மகசூல் இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
- இதனைத் தவிர்க்க பயிர் முளைத்த 90 மற்றும் 120-ஆம் நாள்களில் பிளானோபிக்ஸ் எனப்படும் பயிர் வளர்ச்சி ஊக்கி மருந்தை 4.5 லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி வீதம் கலந்து கைத் தெளிப்பான் மூலம் மாலை வேலையில் தெளிக்க வேண்டும்.
- பயிர் வளர்ச்சி ஊக்கி மருந்துடன் கலக்கும் நீர் உப்பு நீராக இருத்தல் கூடாது.
- இந்த மருந்தை தெளிக்கும்போது நிலம் போதுமான ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும்.
- இவ்வாறு பயிர் வளர்ச்சி ஊக்கி தெளிப்பதன் மூலம் பூ, பிஞ்சு உதிர்வதைக் கட்டுப்படுத்துவதோடு, அதிக அளவு பூக்கள் உருவாக வழி ஏற்படும்.
- மிளகாய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் பயிருக்கு பிளானோபிக்ஸ் தெளித்து அதிக மகசூல் பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்