- 1 ஏக்கர் நிலத்தில் 40 டன் பச்சை மிளகாயை அறுவடை செய்து சாதனை படைத்துள்ளார். விழுப்புரம், பிடாகம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அறிவழகன்
- சொட்டுநீர்ப் பாசனத்தின் கீழ் மிளகாய் சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறலாம்.
- முதற்கட்டமாக உலிக்கலப்பை, சட்டிக்கலப்பை, கொக்கிக் கலப்பை போன்றவற்றை பயன்படுத்தி, மண்ணை பொலபொலவென்று உழுது, பின் 7 டன் தொழுஉரம் இட்டு மீண்டும் நன்றாக உழுது கடைசி உழவிற்கு முன்பாக விரிடி, சூடோமோனாஸ் போன்ற உரங்களை இட்டு அதன்பின் ஓர் உழவு உழுது கொள்ள வேண்டும்.
- பின்னர் அரை அடி இடைவெளியில் 5 அடி அகலத்திற்கு பார் அமைத்து, பார் ஒன்றுக்கு இரண்டு அடி இடைவெளியில் இரண்டு வரிசைகள் அமைத்து, செடிக்குச்செடி இரண்டரை அடி இடைவெளியில் 35 நாட்களான பச்சை மிளகாய் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
- 1 ஏக்கருக்கு மொத்தம் 10,000 நாற்றுகள் தேவைப்படும்.
- US எனப்படும் விதை நிறுவனத்தின் US 244 என்ற உயர் ரகத்தை, நாற்றுகள் அனைத்தும் குழித்தட்டு முறையில் விவசாயியே உற்பத்தி செய்கிறார்.
மேலும் விபரங்களுக்கு அறிவழகன், 09865654219.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Superb…am also getting into agri…
I have decided to do organic farming in the near summer,but before that I learnt many technics through Agri applications.very supportive app.
Thank you