முருங்கையில் இலைப்பிணிக்கும் புழு

முருங்கை சாகுபடி குறித்து, க.பரமத்தி, அரவக்குறிச்சி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மணி கூறியதாவது:

  • கரூர் மாவட்டத்தில் 4,800 ஏக்கர் பரப்பளவில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரவக்குறிச்சியில், 3,சூ385 ஏக்கர், க.பரமத்தியில், 1,033 ஏக்கர் பரப்பளவில் முருங்கை விவசாயம் நடக்கிறது.
  • தற்போது, மரத்தில் பூக்கள் தோன்றி பிஞ்சு விட ஆரம்பித்துள்ளன. இரவில் நிகழும் குளிர் தொடர்ந்து பகலில் காணப்படும் வெப்பநிலை காரணமாக இலைப்பிணிக்கும் புழு மற்றும் மொக்கு புழுவின் தாக்கம் காணப்படுகிறது.
  • இதை தடுக்க குளோர்பைரிபாஸ் ஒரு மில்லி அல்லது தையோடிகார்ப் நனையும் தூள் ஒரு கிராம் இதில் ஏதேனும் ஒரு மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் காலை வேளையில் தெளிக்க வேண்டும்.
  • மருந்து மரங்களில் நன்கு ஒட்டும் அளவில் இருக்க வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கு மிகாமல் மருந்து கலவையை தயார் செய்து தெளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *