முருங்கை எண்ணையில் லாபம் பார்க்கும் இயற்கை விவசாயி!

`முருங்கை விவசாயிகள் அதன் விதைகளை எண்ணெய் ஆக்கி மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் தகுந்த லாபம் கிடைக்கும்’ என்கிறார் இயற்கை விவசாயியான சரோஜா குமார்.

முருங்கை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள லிங்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சரோஜா குமார்.

இயற்கை விவசாயியான இவர், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மைச் சீடர்களில் இருவர். நம்மாழ்வாரிடம் வானகத்தில் இயற்கை வாழ்வியல், தற்சார்பு வாழ்வியலைக் கற்று, அதை ‘உணவே மருந்து’ என்று இந்தியா முழுக்க முன்னெடுத்து வருகிறார்.

அதோடு, தனது கிராமத்தில் இயற்கை முறையில் முருங்கையை விளைவித்து வருகிறார். தமிழ்நாட்டிலேயே அதிகம் முருங்கை விவசாயம் அரவக்குறிச்சி பகுதியில்தான் நடக்கிறது. அதனால்,முருங்கை விதையில் எண்ணெய் தயாரித்து, அதை விற்பனை செய்து வருகிறார். மற்ற விவசாயிகளையும் இப்படி மதிப்புக்கூட்டி விற்பனை செய்பவர்களாகவும் மாற்றி வருகிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சரோஜா குமார், “அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை அதிகம் விளையுது. ஆனால், தகுந்த விலையோ, சேமிப்பு வைக்க சேமிப்புக் கிடங்கோ இல்லை. இங்கு முருங்கை சார்ந்த தொழிற்சாலையும் இல்லை.

அதனால், விவசாயிகளுக்கு இப்படி முருங்கை விதையிலிருந்து எண்ணெய் தயாரிப்பது பயனுள்ளதா இருக்கும். இந்த எண்ணெய் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்குது. பொடுகு, சொரியாசிஸ் போன்ற தோல் பிரச்னைகளுக்கு முருங்கை எண்ணெய் மிகச் சிறந்த தீர்வாக உள்ளது.

என்னோட தங்கை மகள் பள்ளி ஆண்டு விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்வு முடிந்த பின்னர், மேக்கப் சுத்தம் செய்ய எல்லோரும் தேங்காய் எண்ணெய் பூசிக் கழுவிக்கொண்டு இருந்தனர். அவர், முருங்கை எண்ணெயை முகத்தில் பூசி பஞ்சு வைத்து லேசாகத் துடைத்ததும் சுத்தமாகப் போய்விட்டது.

அவரின் தோழிகளும் ஆசிரியர்களும்கூட, ‘நீ மட்டும் எப்படி இப்படி விரைவில் சுத்தம் செய்தாய்?’ என்று வியப்புடன் கேட்டனர். அதேபோல்,சென்னையைச் சேர்ந்த நண்பர் ஒருவர், ‘முருங்கை எண்ணெய் பூச ஆரம்பித்த பின்னர் முகத்தில் மற்றும் கைகளில் இருந்த கரும்புள்ளிகள் மறைந்து வருவதாக’க் கூறினார்.

இப்படி முருங்கை எண்ணெய் பல பிரச்னைகளுக்குத் தீர்வா உள்ளது. முருங்கை விவசாயிகள் இப்படி எண்ணெய் ஆக்கி மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் தகுந்த லாபம் கிடைக்கும்” என்றார்.

நன்றி: பசுமை விகடன்

முருங்கை எண்ணையில் பல பலன்களை இங்கே தெரிந்து கொள்ளலாம். வெளி நாடுகளில் இதை பற்றி நிறைய தெரிந்து உள்ளது..

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “முருங்கை எண்ணையில் லாபம் பார்க்கும் இயற்கை விவசாயி!

  1. மணி says:

    நான் முருங்கை எண்ணெய் எடுத்து விற்க ஆசை படுகிறேன். எனக்கு நீங்கள் உதவ முடியுமா????
    உங்களுடைய தொலைபேசி எண் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *