முருங்கை பழ ஈ

  • செடிமுருங்கைசாகுபடியில் முருங்கை காய்களைத் தாக்கும் முக்கிய பூச்சி இது.
  • ட்ரோசொபிலா என்ற சிறிய வகையைச் சேர்ந்த இந்த பழ ஈக்கள் முருங்கை பிஞ்சுகளைத் தாக்கி சேதம் விளைவிக்கின்றன.
  • பிஞ்சுகள் வளர ஆரம்பிக்கும்போது மெல்லிய தோல்களில் முட்டையிடுகின்றன.
  • இரண்டு மூன்று நாட்களில் வெளிவரும் கால்கள் இல்லாத வெண்மை நிற புழுக்கள் திசுக்களைச் சாப்பிடும்.
  • பிஞ்சின் நுனிப்பகுதியில் இருந்து தொடங்கும். தாக்கிய பகுதிகளில் இருந்து காபி நிறத்தில் பிசின் போன்ற திரவம் வடிய தொடங்கி, நுனிப்பகுதியை மூடிவிடும். பிஞ்சுகள் சுருங்கி, வெம்பி, அழுகி காய்ந்துவிடும்.
  • காய்களில் பிளவுகளிலிருந்து துர்நாற்றம் வீசும்.
  • 7 முதல் 10 நாட்கள் வரை வளர்ந்த புழுக்கள் காய்களில் இருந்து நிலத்தில் விழுந்து கூட்டுப்புழுக்களாக மாறி, அடுத்து காய்க்கும் பருவம் வரை நிலத்தில் உறக்க நிலையில் இருக்கும்.
  • கூட்டுப்புழுக்கள் தாய் ஈக்களாக மாறி மீண்டும் சேதத்தை விளைவித்து வாழ்க்கை சுழற்சியைத் தொடங்கும்.

கட்டுப்பாடு:

  • பாதிக்கப்பட்ட பிஞ்சுகளை முழுவதுமாக சேக ரித்து மண்ணில் புதைத்தோ அல்லது நன்கு தீயிட்டோ எரித்துவிட வேண்டும்.
  • மண்ணில் கூட்டுப்புழுக்களை வெளிக்கொண்டுவர 2-3 முறை உழவு செய்து காயவிட வேண்டும்.
  • காய்களின்மீது ஈக்கள் அமர்ந்து முட்டையிடுவதைத் தடுக்க 3 சதம் வேப்ப எண்ணெய்க் கரைசல் தெளிக்க வேண்டும்.
  • முருங்கை பூக்கும் தருணத்தில் மேங்க்ளர் (சாக் தயாரிப்பு) 30 மிலி / 10 லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • பிஞ்சு வளர ஆரம்பித்து 20 முதல் 30 நாட்களில் மறுமுறை “மேங்க் ளர்’ அதே அளவு தெளிக்க வேண்டும். அடுத்து 15 நாட்கள் இடைவெளிவிட்டு மீண்டும் மேங்க்ளர் தெளிக்க வேண்டும்.
  • 50 சதவீதம் காய்கள் உருவான நிலையில் அதாவது இரண்டாவது முறை மேங்க்ளர் பயன்படுத்துவதற்கு பதில் நிம்பிசிடின் 0.03 சதம் அளவில் பயன்படுத்த வேண்டும். மேலும் நீம் சீட் கொணல் எக்ஸ்ட்ராக்ட் (என்எஸ்கேஇ) 2 லிட்டர்/மரம் ஊற்றினால், பழ ஈக்களின் தாக்குதலை குறைக்கலாம்.

நன்றி: தினமலர் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *