தரிசு நிலத்தில், மூங்கில் சாகுபடி செய்வது குறித்து, உத்திரமேரூர் அடுத்த, கைத்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த, ‘எழில்சோலை’ மரம், மாசிலாமணி கூறியதாவது:
- விவசாயிகளின் பச்சை தங்கம் என, மூங்கில் அழைக்கப்படுகிறது.
- இதில் கல்மூங்கில், பொந்துமூங்கில், வல்காரிஸ், பால்கோவா ஆகிய ரகங்கள் உண்டு.
- எந்த ரகத்தை பயிரிட்டாலும், கணிசமான வருவாய் ஈட்டலாம்.
- வல்காரிஸ் ரகம் மூங்கிலில், கூடுதல் வருவாய் கிடைக்கிறது.
- 1 ஏக்கர் மூங்கில் சாகுபடி செய்தால், நான்கு ஆண்டுகளுக்கு பின், 2 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டலாம்.
- மூங்கில் சாகுபடிக்கு, உரம் மற்றும் நீர் நிர்வாகம் அதிகமாக தேவைப்படாது.
- இயற்கையாக கிடைக்கும் மழையில், அறுவடை செய்து விடலாம்.
- பயிரிடப்படாத தரிசு நிலத்தில், சாகுபடி செய்தால், வருவாய்க்கு வழி வகுக்கும்.
- மேலும், பண்ணை குட்டை அமைக்கும் போது, சுற்றிலும் மூங்கிலை நட்டால், மண் அரிப்பை தடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: 9443638545
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்