ஒரு ஏக்கரில் திசு வாழை சாகுபடி லாபம் ரூ.5 லட்சம்

மதுரை மாவட்டம் மேலுார் அருகே வேப்படப்பை சேர்ந்தவர் வாழை விவசாயி ஜெகதீஸ்வரன். மேலுார் தோட்டக்கலைத் துறை மூலம் திசு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ‘ஜி.9.’ ரக வாழையை சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளார்.

தோட்டக்கலை உதவி அலுவலர் சண்முகசுந்தரம் கூறியதாவது:

  • வீரியமிக்க ‘ஜி.9’ ரகத்தைச் சேர்ந்த வாழை மரத்தில் இருந்து திசு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட வாழை கன்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்கிறோம். நோய் தாக்குதல் இருக்காது.
  • வீரியமிக்க வாழை என்பதால் பராமரிப்பு செலவு மிகவும் குறைவு.
  • வாழை மரத்தின் துார் பகுதி கனமாக இருப்பதால் மழை, காற்று போன்ற இயற்கை இடர்பாடு பாதிப்புகளில் அதிக பாதிப்பு வராமல் பாதுகாக்கலாம்.
  • தோட்டக்கலை வழங்கும் அட்டவணைப்படி இயற்கை உரத்தை திசு ழைக்கு பயன்படுத்தினால் பிற வாழை விவசாயத்தை விட 3 மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என்றார்.

விவசாயி ஜெகதீஸ்வரன் கூறியதாவது:

  • ஒரே நேரத்தில் வாழை தார்களை அறுவடை செய்ய முடிகிறது.
  • பூவன், ஒட்டு போன்ற பிற ரகங்களை சேர்ந்த வாழைகளில் வாழைத்தாரில் உள்ள காய்களின் எண்ணிக்கையை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால் திசு வாழையில் எடை கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது.
  • ஏக்கருக்கு 33 டன் மகசூல் கிடைக்கிறது.
  • ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறது. லாபம் ஐந்து லட்சம் ரூபாய் கிடைக்கிறது என்றார்.

தொடர்புக்கு 09751018008 .
– எஸ்.பி.சரவணக்குமார் மேலுார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

4 thoughts on “ஒரு ஏக்கரில் திசு வாழை சாகுபடி லாபம் ரூ.5 லட்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *