வாழைக்கழிவு மண்புழு கம்போஸ்ட் பயன்பாட்டால் சேமிப்பு

மண்புழு கம்போஸ்ட் முறையால் ஆண்டுக்கு சுமார் ரூ.913கோடி சேமிக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 8.30 லட்சம் எக்டேர் பரப்பளவில் வாழை பயிரிடப்படுகிறது. இதில் 298 லட்சம் டன் வாழைத்தார் உற்பத்தி செய்யப்படுகிறது. வாழை உற்பத்தியிலும் (82.5 லட்சம் டன்), உற்பத்தித் திறனிலும் (65.8டன்) தமிழக முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் பூவன், கற்பூர வள்ளி, நெய்பூவன், ரஸ்தாளி, மொந்தன், நேந்திரன், செவ்வாழை, ரொ பஸ்டா என பல தரப்பட்ட வாழை ரகங்கள் பயிரிடப்படுகின்றன.

பொதுவாக, தமிழ் நாட்டில் வாழைச் சாகுபடி நஞ்சை மற்றும் தோட்டக்கால் முறைகளில் செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 298 லட்சம் டன் வாழை உற்பத்தி செய்யும் பொழுது, சுமார், 375லட்சம் டன் அளவில், இலைச்சருகு, தண்டு, கிழங்கு, கொன்னைப்பகுதி போன்ற வாழைக் கழிவுகள் உருவாகின்றன. தோட்டக்கால் முறை வாழை சாகுபடியில் வாழை கழிவுகளை நிலத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இந்த வாழை கழிவுகளில் அபரிமிதமான ஊட்டச்சத்துக்கள் வீணாகின்றன. வாழை சாகுபடியில் நாம் பயன்படுத்தும் ஊட்டச் சத்துகளில் சுமார் 4 முதல் 56 சதம் வாழை காய்களிலும், பழங்களிலும் சேகரிக்கப்பட்டு மண்ணிலிருந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. மீதமுள்ள 44 முதல் 96 சதம் ஊட்டச்சத்துகள், வாழை மரத்தின் மற்ற பகுதிகளான இலைச்சருகு, தண்டு, இலையுறை, கிழங்கு போன்றவைகளில் சேகரிக்கப்பட்டு கழிவுகளாக வீணாக்கப்படுகின்றன.

இத்தகைய கழிவுகளை மண்புழு கம்போஸ்டாக மாற்றி அதனை மீண்டும் வாழைச் சாகு படிக்கே பயன்படுத்தலாம். ஒரு எக்டரிலிருந்து பெறப்பட்ட வாழைக் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் மண்புழு கம்போஸ்டில், சுமார் ரூ.2,587 மதிப்புள்ள தழை சத்தும், ரூ.483 மதிப்புள்ள மணிச்சத்தும், ரூ.7,920 மதிப்புள்ள சாம்பல் சத்தும் உள்ளன.

வாழைக்கழிவு மண்புழு கம்போஸ்டை வாழைச் சாகுபடியில் மறுசுழற்சி செய்தால், மண்ணி லிடப்படும் செயற்கை உரத்தின் அளவைக் குறைத்து ஒரு எக்டர் வாழை உற்பத்தியில் ஆகும் உரச்செலவில் ரூ.11,000 சேமிக்கலாம். மேலும், இம்முறையில், 2ம் நிலை பேரூட்டச் சத்துக்களான சுண்ணாம்பு, மக்னீசியம், கந்தகம் மற்றும் நுண்ணூட்ட சத்துக்களும் மறு சுழற்சியாவதால் மண்வளம் மேம்படுத்தப்பட்டு, வாழையில் அதிக மகசூலும் எடுக்க முடிகிறது.

இது குறித்து தேசிய வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கூறுகையில், மண்புழு கம் போஸ்ட் முறை அனைத்து வாழை சாகுபடி பகுதிகளிலும் நடை முறைப்படுத்தினால், வருடத்திற்கு சுமார் ரூ.913கோடி சேமிக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது என்றனர்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

One thought on “வாழைக்கழிவு மண்புழு கம்போஸ்ட் பயன்பாட்டால் சேமிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *