புதுக்கோட்டை அருகே உள்ள வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு வாழையில் உர மேலாண்மைப் பயிற்சி முகாம் செப். 25-ல் நடைபெறுகிறது.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழையில் புவன், ரொபஸ்டா, கிராண்ட் நையன் ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. வாழை சாகுபடியில் உர மேலாண்மை செய்தால் மட்டுமே நல்ல செழிப்பான மரங்களிலிருந்து அதிக எடை கொடுக்கும் வாழைத் தார்களைப் பெற முடியும்.
வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 25.9.2012-ல் வாழையில் மேலாண்மை குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது.
பயிற்சியில் மண் மாதிரி, உரங்கள் இடும் அளவு மற்றும் நீர்வழி உரமிடல் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட உள்ளது.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோóந்த வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்