வாழையில் எர்வினியா கிழங்கு அழுகல்நோய்

  •  நுண்ணுயிர் கிருமியான பாக்டீரியா (எர்வினியா கரட்டோவோரா) வாழையில் கிழங்கு அழுகல் நோய் ஏற்படுவதற்கு முக்கிய நோய்க்காரணியாக உள்ளது.
  • இந்த நோயின் தாக்கம் திசுவளர்ப்பு வாழையில் (ஜி 9 ) அதிகமாக காணப்படுகிறது.
  • கிழங்கு அழுகல் தாக்கப்பட்ட வாழையின் நடுக்குருத்து அழுகி வளர்ச்சி குறையும்.
  • அதற்கு சற்று முன்னால் தோன்றிய இலை தண்டு பகுதியினுள் சொருகியது போன்று காணப்படும்.
  • நோய் தாக்கப்பட்ட மரத்தினை காய்த்த தண்டுப்பகுதி கிழங்கிலிருந்து பிரிந்து கீழே விழும். கிழங்கு மட்டும் மண்ணிலேயே இருக்கும்.
  • கிழங்கானது அழுகி “”பார்மலின்” நாற்றத்தைக் கொண்டிருக்கும்.
  • நோய் மேலாண்மை
  • நடவு செய்வதற்கு தேவையான வாழைக்கன்றுகளை நோய் தாக்கப்படாத தோட்டங்களிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்.
  • மக்கிய தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை நிலத்தில் இட்டு மண்ணின் வளத்தை மேம்படுத்த வேண்டும்.
  • கோடைக்காலத்தில் 3 முதல் 4 முறை நீர்ப்பாய்ச்சியும் குளிர் காலத்தில் நீர் தேங்காதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • சணப்பை ஊடுபயிராக வளர்ந்து வாழை பூப்பதற்கு முன் உழுது விட வேண்டும்.
  • இரண்டு முதல் 5 மாதம் வரை மாதம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் 2 முதல் 6 கிராம் வீதம் மண்ணில் இட்டு நீர்பாய்ச்ச வேண்டும்.
  • வாழைக்கன்றை காப்பர்ஆக்ஸி குளோரைடு 4 கிராம் / லிட்டர் ஸ்ட்ரெப்டோசைக்ளின் 0.3 கிராம் / லிட்டர் வீதம் அதாவது காலையில் 45 நிமிடம் வரை ஊறவைத்து அதன் பின்பு நடவு செய்ய வேண்டும்.
  • இதே கலவையை நடவு செய்த முதல் மாதம் கழித்து கிழங்கினைச் சுற்றி ஊற்ற வேண்டும்.
  • பருவ காலத்தில் உயிர்க்கட்டுப்பாட்டு காரணியான சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் கரைசலை 3 முறை வாழைக்கு அளிக்க வேண்டும்.
  • வாழை நடவு செய்த பின், ஒரு வாழைக்கன்றுக்கு நுண்ணுயிர் கட்டுப்பாட்டு காரணியான டிரைக்கோடெர்மா விரிடி 50 கிராம் வீதம் நடவு செய்த 2 மம் 4 மாதங்களுக்கு பின்பு இட வேண்டும்.

(தகவல் : முனைவர் செ.தங்கேஸ்வரி, முனைவர் எஸ்.கே.மனோரஞ்சிதம், தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார் நகர், பொள்ளாச்சி. போன்: 04253288722).


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *