கிழங்கு துளைக்கும் கூன் வண்டு
சேதத்தின் அறிகுறி:
- வண்டுகளும் புழுக்களும் மண்ணுக்கடியில் வாழைக் கிழங்குகளைத் துளைத்து சேதப்படுத்தியிருக்கும்
- கிழங்குகளில் சுரங்கப்பாதை போன்ற அறிகுறிகள் காணப்படும்
- தீவிர தாக்குதலாயின் மரமே வாடிப்போகும்
- முட்டைகள்: வெள்ளை நிறமாகவும், வண்டுகள் முட்டைகளை தனித்தனியாக இடும். முட்டைகள் கிழங்கின் மேற்பகுதியில் தோன்றும்
- புழுக்கள்: மஞ்சள் களந்த வெண்மை நிறமாகவும், சிவப்பு நிற தலைகளுடனும், கால்கள் இல்லாமலும் காணப்படும்
- கூட்டுப்புழு: வெள்ளை நிறமாகவும், கிழங்குக்கு உள்ளே காணப்படும்
- வண்டு: வண்டு சிறியதாக கருமை நிறத்துடன் கொம்பு போன்ற வாய் அமைப்புடன் காணப்படும்
- நடும்போது பூச்சி தாக்காத கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும்
- தாக்கிய இடங்களில் மீண்டும் வாழையைப் பயிரிடாமல் மாற்றுப்பயிர் செய்ய வேண்டும்
- ரொபஸ்டா, கர்பூரவள்ளி, மால்போக், சம்பா மற்றும் அடுக்கர் ஆகிய இரகங்களை பயிர் செய்வதை தவிர்க்க வேண்டும்
- பூச்சி தாக்குதல் குறைவாக காணப்படும் இரகங்களான பூவன், கதலி, குன்னன், பூம்காளி போன்றவற்றை நடலாம்
- காஸ்மோலியூர் பொறியை எக்டர்க்கு 5 என்ற கணக்கில் வைக்கலாம்
- தண்டை சிறுசிறு துண்டுகளாக வெட்டி குவியலாகப் போட்டு வைத்து, வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்
- கன்றுகள் நடும்போது ஒவ்வொரு குழியிலும் கார்போஃபியுரான் 40 கிராம் (அ) போரேட் 5 கிராம் (அ) லின்டேன் 20 கிராம் மருந்தை ஒவ்வொரு கிழங்கிற்கும் மணலுடன் கலந்து போட்டு நட வேண்டும்
- நடுவதற்கு முன்னால் வாழைமரக்கன்றுகளை 0.1 சதவிதம் குயினால்பாஸ் மருந்தினுள் முக்கி எடுக்க வேண்டும்
- தீவிர தாக்குதலின் போது டைமித்தோயேட் (அ) பாஸ்பாமிட்டான் (அ) மிதைல் டெமட்டான் மருந்தினை தெளிக்கலாம்
- நடுவதற்கு முன்னால் ஒரு குழிக்கு ஆமணக்கு புண்ணாக்கு 250 கிராம் (அ) கார்பரில் பவுடர் 50 கிராம் (அ) போரேட் 10 ஜி 5 கிராம் இடுவதால் இப்பூச்சியின் தாக்குதலை தடுக்கலாம்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
4 thoughts on “வாழையில் கிழங்கு துளைக்கும் கூன் வண்டு”