வாழையில் நோய்களை சூடோமோனஸ் மூலம் கட்டுபடுத்துவது எப்படி

ஸ்ரீவைகுண்டத்தில் வாழை விவசாயிகளுக்கு கிள்ளிகுளம் வேளாண்மை கல்லுரி மாணவிகளின் செய்முறை பயிற்சி நடந்தது.

ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி பகுதியில் நடந்த பயிற்சி பட்டறையில் வாழை பயிரில் பணமாவாடலை கட்டுப் படுத்தவும் நூற்புழுவை கட்டுப்படுத்தவும் சூடோமோ னாஸ் பயன்படுத்துவதை குறித்து பயிற்சி தந்தனர்

  • இளம் வாழை கன்றுகளின் வேர்களை நீக்கி களிமண் கரைசலில் மூழ்கி எடுக்க வேண்டும்
  • ஒரு கன்றுக்கு 10 கிராம் அளவில் சூடோமோனாஸ்ஸை நன்றாக பரவும் விதம் தூவ வேண்டும்
  • இவ்வாறு சிகிச்சை பெற்ற கன்றுகளை நட்டால் வாழையில் பனமா வாடலையும் நுற் புழு வையும் கட்டுப்படுத்தலாம்.
  • ஒரு ஹெக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ்ஸை 50 கிலோ தொழு உரத்துடன் கல ந்து கடைசி உழவின் போது நடலாம்

வேளாண்மை கல் லுரி மாணவிகள் ஆயிஸா அபிராமி கலைவாணி சந்தியாவள்ளி சிவரஞ்சனி சியாமளாதேவி வினோதினி ஆகியோர் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். 30 நாட்களில் முகாம் பேரின்பபுரம் பேரூர் சிவகளை பொன்னன்குறிச்சி புதுக்குடி பத்மநாமங்கலம் ஆகிய ஊர்களில் நடக்கிறது.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *