சொட்டு நீர் பாசனத்தால் வாழையில் நல்ல பலன் பெறலாம் என்று மதிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தின் (National Research Centre for Banana (NRCB)) தலைவர் முஸ்தபா கூறினார்.

வாழைக்கு சொட்டு நீர் பாசனம் மூலம் 40% சதவீதம் வரை நீரை சேமிக்கலாம் என்றார் அவர்.
மகாராஷ்டிரா, குஜராத் ஆந்திரா மாநிலங்களில் சொட்டு நீர் பாசனம் வாழைக்கு நல்ல மகசூல் கிடைபதாக அவர் கூறினார்.
வாழை ஒரு நீர் விரும்பி பயிர். டெல்டா மாவட்டங்களிலேயே நீர் பிரச்னை இந்த வருடம் வந்து விட்டது.காவேரி நீரை நம்பி சாகுபடி செய்த காலம் மாறி கொண்டு இருக்கிறது. சொட்டு நீர் பாசனம் தமிழ் நாட்டில் மற்ற மாவட்டங்களில் பயன் படுகிறது. டெல்டா மாவட்டங்களிலும் பயன் பெற முடியும் என்றார்.
வாழையில் இருந்து வரும் கழிவுகளை வெர்மிகம்போஸ்ட் செய்தால் வாழை சாகுபடியில் செலவுகளை 50% சதவீதம் வரை குறைக்கலாம் என்றார் அவர்.
மேலும் விவரங்களுக்கு: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்