கற்பூரவல்லி வாழை
ஏக்கருக்கு செலவு போக நிகர வருமானமாக 60 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது என்று கூறுகிறார் அனுபவ விவசாயி ஆசிரியர் பொன்னுராமன், தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பவனமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்.
களர் மற்றும் மணல் இல்லாத மண் வகைகள் ஏற்றது. ஏக்கருக்கு 900 கன்றுகள்.
ஏக்கருக்கு மண்புழு உரம் 3000 கிலோ, கடலை பிண்ணாக்கு 1200 கிலோ, அசோஸ்பைரில்லம், சூடோமோனாஸ் மற்றும் பஞ்சகவ்யா பயன்படுத்தி இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்து பயன்பெற்றுள்ளார்.
ஏக்கருக்கு எரு 5 வண்டி (1250 கிலோ) பயன்படுத்தியுள்ளார்.
விதை நேர்த்தி: பஞ்சகாவ்யா 10 லிட்டர், மஞ்சள் தூள் அரை கிலோ, வசம்பு தூள் ஒரு கிலோ, தேவையான அளவு பசுமாட்டுச்சாணம் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கப்படும் கூழ். இதில் வாழைக்கட்டையை நனைத்து நடவு செய்தால் பூச்சி, நோய் தாக்குதல் குறையும்.
முடிக்கொத்து நோயைத் தடுக்க வசம்பு 1 கிலோ, கடுக்காய் 1 கிலோ, மஞ்சள் ஒரு கிலோ, காய்ந்த வேப்பம் பட்டை 1 கிலோ இவை அனைத்தையும் அரைத்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கட்டைக்கு 1 லிட்டர் வீதம் ஊற்றினால் போதும். வாடல், மஞ்சள் நோய்களை சமாளிக்க புங்கன் இலை 25 கிலோ, வேப்பிலை 10 கிலோ, நொச்சி இலை அல்லது தும்பைச்செடி 10 கிலோ, வசம்பு 2 கிலோ சேர்த்து இடித்து, அதில் தயிர் 1 லிட்டர் கலந்து 21 நாள் ஊறவைத்து 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவும். 7 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் கரைசல் என்ற விகிதத்தில் கிழங்கில் ஊற்றவும் பயன்படுத்தலாம்.
ஒரு ஏக்கருக்கு சாகுபடி செலவு 24 ஆயிரத்து 200 ரூபாய் ஆகியது. வாழைத்தார் விற்பனை 800 தார் 100 ரூபாய் வீதம். வரவு 80 ஆயிரம் ரூபாய். நிகர லாபம் 55 ஆயிரத்து 800 ரூபாய் கிடைத்துள்ளது.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்