வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல்

வாழை நுண்ணூட்ட ஸ்பெஷலானது பெங்களூரு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சியில் உருவான தொழில்நுட்பமாகும். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் தயாரிக்கப்படுகிறது.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

பயன்கள் :

  • நுண்ணூட்ட குறைபாடு உடனே நிவர்த்தியாகிறது. உரத்தின் பயன்பாடு குறைகிறது.
  • பயிரின் வளர்ச்சி துரிதப்படுத்தப்படுகின்றது. நல்ல தரமான பெரிய வாழை குலை கிடைக்கிறது.

வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் உபயோகிக்கும் முறை:

  • வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் 50 கிராம், ஒரு ஷாம்பு பாக்கெட் மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும்.
  • வாழை நட்ட ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது மற்றும் பத்தாவது மாதங்களில் வாழை நுண்ணூட்ட ஸ்பெஷலை தெளிக்க வேண்டும்.
  • வாழை குலை தள்ளிய பின்பு முதல் மற்றும் இரண்டாவது மாதத்திலும் குலைகளின் மேல் தெளிக்க வேண்டும்.
  • இந்த வாழை நுண்ணூட்ட ஸ்பெஷலை பூச்சிக்கொல்லி மருந்துடன் சேர்த்தும் தெளிக்கலாம். தாமிரம் கலந்த பூஞ்சாணக்கொல்லி மருந்துடன் மட்டும் கலந்து தெளிக்க கூடாது.
  • வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் கரைசலை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 6.30 மணி வரையிலும் தெளிக்க சிறந்தது.
  • இலையின் அடிப்பகுதி முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும். குலைகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.

காலாவதி நாள் : உற்பத்தி நாளிலிருந்து 1 வருடம் வரை
அளவு : 1 கிலோ
விலை : ரூ. 125
இந்த வாழை நுண்ணூட்ட ஸ்பெஷலை சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப.மாரிமுத்துவை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். (அலைபேசி : 09442025109)

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *