குறுவை பருவத்தில் நெல் விதை நேர்த்தி

தற்போது குறுவை சாகுபடிக்கான நெல் நாற்றங்கால் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

  • நாற்றங்காலில் விதைக்கும் முன்பாக விதை நேர்த்தி செய்வது அவசியம். விதை நேர்த்தி செய்வதன் மூலம் நெல்லில் விதைகள் மூலம் பரவும் நோய்களை எளிதாகக் கட்டுப்படுத்த இயலும்.
  • நோய் எதிர் உயிரியான சூடோமோனாஸ் புளாரசன்ஸ் பாக்டீரியாவை ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கலந்து குறைந்தபட்சம் 12 மணி நேரம் ஊறவைத்து விதைக்க வேண்டும்.
  • எட்டு செண்ட் நாற்றங்காலுக்கு 600 கிராம் மற்றும் நடவு வயலில் ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் சாண எரு அல்லது மணலுடன் கலந்து இடுவதால் பயிர் வளர்ச்சி அதிகரிக்கிறது.நோய் தாக்குதல் குறைகிறது.
  • விதை நேர்த்திக்கு தேவையான தரமான சூடோமோனாஸ் புளாரசன்ஸ் பாக்டீரியா, ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிலோ 75 ரூபாய்.தேவைப்படும் விவசாயிகள் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வந்து பெறலாம்.
  • மேலும், கோவில் கோபுரங்கள், கட்டிடங்கள், கிணறுகள் மற்றும் பாசன வாய்க்கால்களில் வளர்ந்துள்ள பயனற்ற மரங்களை அழிக்க உதவும் மரங்கொல்லி மருந்து ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
  • ஒரு லிட்டர் மரங்கொல்லி மருந்தின் விலை 600 ரூபாயாகும். குறைந்த பட்சம் 200 மிலி அளவில் கிடைக்கும். தேவைப்படுவோர் ஆராய்ச்சி நிலையத்தில் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ஜெயராஜ் தனது செய்திக்குறிப்பில் ஒரு அறிவிப்பில் கூறி உள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *