தமிழ் நாட்டில் உள்ள விதை பரிசோதனை நிலையங்களை பற்றி நாம் ஏற்கனவே பார்த்தோம். மதுரை மாவட்டம் சிவகங்கையில் புதிதாக இன்னொரு விதை பரிசோதனை நிலையம் திறந்து உள்ளது. இதை பற்றியசெய்தி:
சிவகங்கை: விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் உதயகுமார் கூறியதாவது:
- விவசாயிகளுக்காக சிவகங்கையில் விதை மாதிரி மையம் துவக்கப்பட்டுள்ளது.
- இங்கு பரிசோதனை செய்து, முளைப்புத்திறன் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
- இதற்கு 30 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
- விதைகளை துணிப்பையில் கட்டி, நெற்பயிருக்கு 400 கிராம், பயறு வகை, கடலைக்கு ஒரு கிலோ அளவும் அனுப்ப வேண்டும்.
- பயிர் முளைப்புதிறன் அறிக்கை, விவசாயிகளின் முகவரிக்கு அனுப்பப்படும் என்றார்.
- பயிர், அதன் ரகம் குறிப்பிட வேண்டும்.
நிலையத்தின் முகவரி:விதை பரிசோதனை நிலையம், 81பி/11- மதுரை ரோடு, சிவகங்கை
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்