தமிழகத்தில் ஆங்காங்கே சில அமைப்புக்களால் பாரம்பர்யம் மற்றும் விவசாயம் குறித்த சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. அதனால், உணவு மற்றும் பாரம்பர்ய விதை பற்றிய விழிப்புணர்வு நாளுக்கு நாள் மக்களிடையே பெருகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வரும் 2017 ஜூன் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ‘மாபெரும் தேசிய பன்மய விதை திருவிழா’ நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியைப் பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு, பாரத் விதை விடுதலைக் குழு, ஆஷா ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன. இந்தியா முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய விதைப் பாதுகாவலர்கள் கலந்து கொண்டு விதைகளைப் பற்றிய விளக்கம் தர உள்ளனர்.
நெல், பயிறுவகைகள், முளைக்கட்டிய தானியங்கள், சிறுதானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் என 2000-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய விதைகள் காட்சிக்காக வைக்கப்பட உள்ளன. விழாவில் குழந்தைகளுக்கான நிகழ்வுகள், செயல்முறைப் பயிற்சிகள், பாரம்பர்ய உணவு, தோட்டக்கலை மற்றும் பல்வகை அங்காடிகள் மற்றும் விதைப் பரிமாற்றம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
மேலும், சமூக விதை வங்கிகள், விதை சேகரிப்பாளர்கள், 100 விதை வர்த்தகர்கள், இயற்கை வேளாண்மை ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்