தானியக்கிடங்குகளில் இயற்கை பூச்சிக் கட்டுப்பாடு

  • சேமிப்பில் பூச்சித் தாக்குதல் வராமல் இருக்க, சேமிக்கும்முன்பு, விதைகளையும் தானியங்களையும் அமாவாசை அன்று காய வைக்கவேண்டும்.
  • விதைகளை மண்கலத்தில் இட்டு, சமையல் அறையிலுள்ள பரண்மீது வைக்கலாம். அடுப்புப்புகை பூச்சிகளுக்கு பிடிக்காது. அதனால் பூச்சியின் தாக்குதல் இராது.
  • தானியங்கள், மரங்கள் ஆகியவற்றை பெளர்ணமி அன்று அறுவடைச் செய்தால், தானியக்கிடங்கு பூச்சி தாக்குதல் ஏற்படும்.
  • சேமிக்கும் போது விதைகளோடு, காய்ந்த வேப்பிலையைக் கலந்து சேமிக்கவேண்டும்.
  • விதை சேமிக்கும் போது, காய்ந்த நொச்சி இலைகளைக் கலந்து சேமித்தல் வேண்டும்.
  • விதைகளை புங்கம் இலைகள் கலந்து பின் சேமிக்கலாம்.
  • 1 கிலோ வசம்புத்தூளை 50 கிலோ தானியத்தோடு கலந்து சேமித்தால் 1 வருடம் வரை கெடாமல் இருக்கும்.
  • உணவுத்தானியங்களின் விதையை சேமிக்கும்போது, சேமிப்பு கலனில் முக்கால் பங்கு உயரத்திற்கு விதையை இட்டுப்பின் அதன் மீது சாதாரண துணியை பரப்பி பின் வேப்பிலை புங்கம் மற்றும் நொச்சி இலைகளின் மீது பங்குக்கு போட்டு, பின் அக்கலனில் வாய் வரை மணல் போடவேண்டும்.
  • 10 சதவீதம் உப்புக்கரைசலை சாக்குப் பையை நனைத்து பின் காயவைத்து அதில் பயறுவகைகள் மற்றும் உணவுத்தானியங்களை சேமித்தால் பூச்சி தாக்கலைக் கட்டுப்படுத்தலாம்.
  • பொதுவாக விதைகளை கொட்டை/தோலோடு சேமித்தால், தானியக் கிடங்கில் தாக்கும் பூச்சிகளிலிருந்து தப்பலாம்.

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *