நிலக்கடலை விதை நேர்த்தி

நிலக்கடலையில் உயிருள்ள விதைகளை எளிய முறையில் பிரித்தெடுத்தல்

தேவையான பொருட்கள்

விதைகளை ஊறவைக்க தேவையான பாத்திரம், ஈரமான சாக்குப்பை, கால்சியம் குளோரைடு என்ற உப்புக்கரைசல்.

செய்முறை

  • நிலக்கடலை பருப்பில் நன்கு முற்றாத உடைந்த சுருங்கிய மற்றும் நோய் தாக்கிய சிறிய விதைகளை முதலில் பரித்தெடுக்க வேண்டும்.
  • ஒரு கிலோ விதைக்கு 1/2 லிட்டர் என்ற அளவில் 0.5 சத கால்சியம் குளோரைடு உப்புக் கரைசலில் 6 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
  • ஒரு ஏக்கர் விதைக்கு (50-55 கிலோ விதைப் பருப்பு) தேவையான 0.5 சத கரைசல் தயார் செய்ய 125 கிராம் கால்சியம் குளோரைடு என்ற இராசயன உப்பை 25 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும்.
  • பிறகு ஊறவைத்த விதைகளை இரண்டு ஈர சாக்குகளுக்கிடையே மெல்லியதாக பரப்பி 16 மணி நேரம் இருட்டில் மூட்டம் வைக்க வேண்டும்.
  • இந்த சமயத்தில் உயிருள்ள விதைகளிலிருந்து சுமார் 5 மி.மீ அளவு முளைக்குருத்து வெளிவந்து விடும்.
  • முளைக்குருத்து வெளிவந்த விதைகளை தனியே பிரித்தெடுத்து நிழலில் உலர்த்த வேண்டும்.
  • இவ்வாறு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை முளைவிட்ட விதைகளை 3 முறை பிரித்தெடுத்து நிழலில் உலர்த்த வேண்டும். கடைசியில் முளைவராத விதைகள் இறந்த விதைகளாகும்.
  • இவ்வாறு தேர்வு செய்த விதைகளை கார்பன்டாசிம் என்ற பூஞ்சாணக் கொல்லி கொண்டும் பின்னர் ரைசோபியம் கொண்டும் விதை நேர்த்தி செய்து உடனே விதைக்க வேண்டும்.

பயன்கள்

  • முளைவிடாத இறந்த விதைகளை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக எண்ணெய் எடுக்க பயன்படுத்தலாம்.
  • மேலும் வயலில் போதுமான அளவு செடிகளை, விதைகளை விரயம் செய்யாமல் பெற முடியும்.
  • விதைகளை கால்சியம் குளோரைடு கரைசலில் ஊர வைப்பதால் கால்சியம் குறைபாடால் வரக்கூடிய நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
  • இதனால் ஏறக்குறைய 10 முதல் 15 சதம் கூடுதலாக விளைச்சலைப் பெறமுடியும்.

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *