மத்ய அரசாங்கம், ஒரு புதிய சட்டம் கொண்டு வர முயற்சிகிறது.
BT கத்தரிக்காய் பயிர் இட அனுமதி வழங்குவதை எதிர்த்து நாடு முழுவதும் போரட்டங்கள் நடந்த பின், அதற்கு இடை கால தடை விதிக்க பட்டுள்ளது. இதை உடைத்து ஏறிய பின்னப்பட்ட சட்டமாக, புதிதாக, Biotechnology Regulatory Authority of India (BRAI ) என்று புதிய ஆணையம் உருவாக்க மத்ய அரசு மசோதா தயார் செய்துள்ளது.
இந்த மசோதா படி:
– மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் பாதுகாப்பு பற்றி ஆதாரம் இல்லாமல் அறிவியல் முரணாக பேசினால், ஆறு மாதம் முதல் ஒரு வருடம் சிறை
– மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு, சிங்கள் விண்டோ clearence மூலம் அங்கீகாரம். இந்த ஆணையத்தில், மொத்தம் மூன்று பேர். அவர்கள் சரி என்றால், என்ன மாதிரியான பயிர்களுக்கும் ஈசியாக அங்கீகாரம். அனான பட்ட அமெரிக்க நாட்டிலேயே, இப்படி GM பயிர்களுக்கு அங்கீகாரம்கிடைக்காது!
– மரபணு மாற்றப்பட்டபயிர்களின் பாதுகாப்பு தகவல்கள், சம்பந்த பட்ட நிறுவனத்தின், “வணிக ரகசியம்” என்று கருத படும்!
– மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அனுமதிபதா இல்லையா என்ற உரிமை மாநில அரசுக்கு இனிமேல் கிடையாது.
ஆக, BT கம்பனிகள் அடுத்த ரவுண்டு தயார் ஆகிவிட்டனர். உங்கள் மேஜையில் BT கத்திரி அல்லது BT வெண்டை வரும் வரை மொன்சொண்டோக்கள் ஓய மாட்டார்கள்!
நன்றி: பூவலகு சுற்று சூழல் மார்ச் 2010 இதழ்
மேலும் விவரங்களுக்கு: பூவலகின் நண்பர்கள்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
சந்தையில் வாங்கற காய்கறி விதைகளை மரபணு மாற்று விதைகள்னு கண்டு புடிக்கறது எப்படி? எதனா கேள்வி கேட்ட HIGH-BREEDNU சொல்லராங்க விக்கறவங்களுக்கு அத பத்தின விவரம் தெரிஞ்சி இருக்க வாய்ப்பில்லை.
விதைகளை எப்படி அடையாளம் கண்டு புடிக்கறது?
தயவு செஞ்சி சொல்லுங்க
என்னுடைய அழைப்பு எண் -9487981916
அன்புள்ள முருகேஷ்,
பதில் ஈமெயில் அனுப்பவதில் தாமதம் ஏற்பட்டதிற்கு மன்னிக்கவும்!
இந்தியாவில் இப்போது பரிசோதனை நிலையில் பல மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் இருந்தாலும், அனுமதி செய்யப்பட்டது பருத்தி மட்டும் தான்
மற்ற எல்லா பயிர்களும் வீரிய விதைகள் தான். அவை மரபணு மாற்றப்பட்டவை அல்ல. மத்திய அரசாங்கம் பல மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிர்ப்பினை கண்டு கொள்ளாமல் அனுமதி கொடுப்பதற்கு முயற்சி செய்து வருகிறது.
இது உங்கள் ஐயத்தை போக்கும் என்று நம்புகிறேன்
நன்றி அட்மின்