பாரம்பரிய விதைகளை சேகரித்து வைத்து பல ஆண்டுகள் கழித்து திரும்பி சாகுபடி செய்கின்றனர் ஆந்திராவில் உள்ள அடிலாபாத் மாவட்ட ஆதிவாசிகள்.
இந்த மாவட்டத்தில் வாழும் லட்சுமிபாய் என்பவர் 12 ஆண்டுகள் முன் சேமித்து வைத்துள்ள பாரம்பரிய சிறு தானிய விதைகளை காண்பிக்கிறார்.
எப்படி இவர் பல ஆண்டுகள் விதைகளை சேமித்து வைத்துள்ளார்?
சேமிக்க பட வேண்டிய விதைகளை முதலில் காற்று புகாத மூங்கில் கூடை ஒன்றை எடுத்து கொள்கிறார். . பின்பு அதன் உள்ளே வேப்ப இலைகளை வைத்து சுற்றிலும் மூடுகிறார். அதன மீது சாம்பலை வைத்து பரப்புகிறார்.அதன் நடுவே விதைகளை வைத்து மூடுகிறர். மூங்கில் கூடையை மூடியபின் அதன் மீது பசுஞ்சாணத்தை பூசி விடுகிறார்.
இப்படி சேமிக்க படும் விதைகள் பல ஆண்டுகள் முளைக்காமல் பூச்சி வாராமல் இருக்க முடிகிறது என்கிறார்.
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்