“மானாவாரி விவசாயிகள் விதை நேர்த்தி செய்து விதைப்பதால் வறட்சியை தாங்கி வளரும் தன்மை கிடைக்கும்’, என்று சென்டெக்ட் திட்ட இயக்குநர் மாரிமுத்து அறிவுறுத்தி உள்ளார்.
கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்கிறது. தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் விரக்தியிலிருந்த மானாவாரி விவசாயிகள் தற்போதைய மழையை பயன்படுத்தி தானியங்கள், எண்ணெ# வித்துகள், பயறு வகைகளை பயிரிடுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தரிசு நிலங்களில் மானாவாரி பயிரிடுவதால் வெப்பத்தின் தாக்கம் குறையும். வாழை, தென்னை விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இந்த மழை அமைந்துள்ளது.
மழையால் வேர் நன்கு வளர்ச்சி பெற்று, நுண்ணுயிர்கள் பெருகும். நுண்ணூட்ட சத்துகள் இயற்கையாக கிடைப்பதால், கெமிக்கல் உரங்களின் பயன்பாடு குறையும் வாய்ப்புள்ளது.
காமாட்சிபுரம் சென்டெக்ட் கே.வி.கே., திட்ட இயக்குநர் மாரிமுத்து கூறுகையில், “மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை வாழை விவசாயத்திற்கு நல்ல பலனளிக்கும். நடவு செய்து 3 மாத பயிராக உள்ள வாழையில் அகத்தி உள்ளிட்டவற்றை ஊடுபயிராக பயிரிடலாம்.
தற்போதுள்ள ஈரப்பதத்தில் வளர்ந்த பின் அவற்றை வெட்டி மடித்து உரமாக்கலாம். இதனால் நிலத்தில் உள்ள காரத்தன்மை குறையும். மானாவாரி விதைப்பவர்கள் விதை நேர்த்தி செய்து பயிரிட்டால், நுண்ணுயிர் சத்து கிடைத்து வறட்சியை தாங்கும் தன்மையை பெறும்,’ என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்