விதைகள் காற்றிலுள்ள ஈரப்பதத்தை கிரகிக்கும் தன்மையுடையவையாதலால், காற்றின் ஈரத்தன்மை அதிகமுள்ள கடலோரப் பகுதிகள் மற்றும் நதி கரைகளில் விதைகளை சேமித்திட ஈரக்காற்று புகாபைகளையே உபயோகிக்க வேண்டும்.
இதுகுறித்து விதை ஆய்வு துணை இயக்குநர் நாராயண பிரசாத் கூறியதாவது:
- விதைகளை கிடங்குகளில் சேமித்து வைக்கும் போது சாக்குப் பைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கும்போது 6 அல்லது 7 வரிசைக்கு மேல் அடுக்க வேண்டாம்.ஏனென்றால் மேலே உள்ள மூட்டைகளின் பாரம் அடியிலுள்ள மூட்டைகளைப் போட்டு அழுத்துவதால் அடி மூடையிலுள்ள விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்க வாய்ப்புள்ளது.
- விதை மூடைகளை வெறும் தரையின் மீது அடுக்கி வைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
- அதே போல் சுவற்றின் மீது சாய்த்து அடுக்குதலையும் தவிர்க்க வேண்டும். இதனால் தரை மற்றும் சுவர்களில் உள்ள ஈரப்பதம் ஊடுருவி அவற்றைப் பாதிப்பதைத் தடுக்கலாம்.
- எப்பொழுதும் விதை மூடைகளை மர அட்டகங்கள் அல்லது தார்ப்பாய் விரித்து அதன் மீது அடுக்கி வைக்க வேண்டும்
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்