விதை மூலமாகப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் விதை நேர்த்தி

விதை மூலமாகப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதைகளை விதைநேர்த்தி செய்துகொள்வது அவசியம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

 மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும் விவசாயிகளுக்கு நடப்பு பருவத்துக்குத் தேவையான இடுபொருள்களான விதைநெல், உரங்கள் இருப்பு வைத்து விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 மேலும், நடப்பு தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளுக்கும், எதிர்வரும் நாள்களில் கீழ்பவானி பாசனப் பகுதிக்கும் ஏற்ற நெல் ரகங்களான ஏ.எஸ்.டி-16, கோ-50, கோ-51, ஏ.டீ.டி-39, கோ-43, ஏ.டீ.டி-38, ஏ.டீ.டி-50, வெள்ளை பொன்னி, கோ-48, கோ-49, ஏ.டீ.டி-44 போன்ற ரகங்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 விதை மூலமாகப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதை நேர்த்தி செய்து விவசாயிகள் விதைக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் மருந்தை கொண்டு விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்கள், தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற தங்கள் பகுதி வேளாண்துறை களப்பணியாளர்களை அணுகி பயன்பெறலாம் என்றார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “விதை மூலமாகப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் விதை நேர்த்தி

  1. திவேக் says:

    ஈரோட்டி முள்ளங்கி விதை எங்கு கிடைக்கும்.. வீட்டு தோட்டத்திற்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *