உலகமயமாக்கல் மூலம் வரும் ஒரு பக்க விளைவு, நாடுகளுக்கு இடையே அதிகமான வர்த்தகம்.
அதன் ஒரு பக்க விளைவு, ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பூச்சிகளும் களை வகை செடிகள் பரவுவது.
ஏற்கனவே, நம் நாட்டில், பார்தேனியம் , மாவு பூச்சி போன்ற ராட்சச செடிகளும் பூச்சிகளும் வேறு நாட்டில் இருந்து வந்து இருக்கின்றன.
இப்போது, ஆப்ரிக்க நாட்டில் இருந்து ராட்சச நத்தைகள் கேரளத்திற்கு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன. இவை எல்லா செடிகளையும் கபளீகரம் செய்து, ஊர் முழுவதும் பரவி வருகின்றனவாம்!
மாவு பூச்சிக்கும், பார்தேனியம் “வெற்றிக்கு” காரணம் என்ன என்றல், இவற்றிற்கு , இந்த மண்ணில், இயற்கையான எதிரி எதுவும் இல்லை.!
இவற்றை கட்டு படுத்த இவை எந்த நாட்டில் இருந்து வந்தனவோ, அங்கிருந்து அவற்றின் இயற்கை எதிரியை எடுத்து வர வேண்டும்! வேறு வழியே இல்லை!!
நன்றி: ஹிந்து நாளிதழ்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
2 thoughts on “கேரளத்தை தாக்கும் ஆப்ரிக்க ராட்சச நத்தை!”