கோடீஸ்வரர்களின் கடன்!

ஒரு விவசாயி விவசாயம் செய்ய வங்கியில் கடன் வாங்குகிறார் என்போம். திடீர் என்று காற்று அடித்தோ, அல்லது பூச்சி தாக்குதல் மூலமோ, அல்லது விலை வீழ்ச்சி மூலமோ, அவரால் போட்ட பணத்தை எடுக்க முடியவில்லை.
வங்கிகள் உடனே என்ன செய்யும்? அவருடைய சொத்துகளை ஜப்தி செய்யும். வெறும் 20 ஆயிரம் ருபாய் கடன் நிலுவைக்காக ஜப்தி செய்ய பட்ட செய்திகளை நாம் தினமும் பார்க்கிறோம்.

மகாராஷ்ட்ராவில், BT பருத்தி சாகுபடி செய்து கடன் பட்டு தற்கொலை செய்தவர்களை பற்றி படித்து உள்ளோம்.

சரி, பெரிய அளவில் கடன் வாங்குவோர் நிலை என்ன?
Economic Times பத்திரிகையில் அதை பற்றி வந்துள்ளது.

10 கோடிக்கும் மேல் கடன் வாங்கி வங்கிகளுக்கு நாமம் போட்டவர்கள் 700 பேர். இவர்களால் திரும்பி வராத பணம் 47000 கோடி!
இப்படி கடன் வாங்கி திருப்பி தராத பணக்காரர்களிடம் வங்கிகள் பேச்சு வார்த்தை நடத்தி (one time settlement, refinancing) எளிதாக பணத்தை திருப்பி தர முயற்சி செய்கிறார்களாம்!

ஜப்தி போன்றவை சுப்பனுக்கும் குப்பனுக்கும் தான்!

இதில் இன்னொரு கொடுமை என்றால், இந்த ஏமாற்று பேர்வழிகள் ஏற்கனவே கடன் திருப்பி தராமல் இருக்கும் போது இன்னொரு வங்கியில் கடன் வாங்குகிறார்களாம்.

முழு செய்தியை Economic Times பத்திரிகையில் படித்து கோப படலாம்!


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *