சரத் பவரும் விவசாய துறையும்

மதிய வேளாண்மை துறை மந்திரி சரத் பவர் பிரதம மந்திரியிடம், தனக்கு அதிகமாக வேலை பளு அதிகம் இருபதாகவும் தனக்கு வேலை பளு குறைக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது கடவுளாகவே கொடுத்துள்ள ஒரு சந்தர்பம். சரத் பவர்க்கு வேளாண்மை துறை என்பது ஒரு பொழுதுபோக்கு. (ஹாபி). அவருக்கு எந்தனையோ பணம் தரும் முக்கிய வேலைகள் உள்ளன. IPL கிரிக்கெட், இதற்கே பாவம் அவர்க்கு டைம் இல்லை. 800 மில்லியன் விவசாயிகளை கவனிப்பாரா, 800 மில்லியன் டாலர் புழங்கும் கிரிக்கெட்டை கவனிப்பாரா?

மன்மோகன் சிங் சரத் பவர் வேண்டுகோளை செவி மடித்து,  இவரை மாற்றுவார் என்று நம்புகிறோம்.

இந்த நாடு, உணவு பிரச்னை நோக்கி போய் கொண்டிருக்கிறது. ஏறி கொண்டே போகும் மக்கட் தொகை, பசுமை புரட்சியால் வந்த பாதிப்புகள்,  என்று எல்லா பக்கமும் விவசாயத்திற்கு பிரச்னைகள். சரத் போன்ற ஒரு பழம் பெருச்சாளி சென்று, புது எண்ணகளோடு புது முயற்சிகள் செய்ய  துடிக்கும் ஒரு இளைய வயதினர் தேவை.

மன்மோகன் சிங்செய்வாரா?


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *